தென்னிந்திய சினிமா

‘த கேரளா ஸ்டோரி 2’ தயாரிப்பாளருக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ப்ரியா

சுதிப்டோ சென் இயக்​கத்​தில் கடந்த 2023-ம்ஆண்டு வெளியான படம், ‘த கேரளா ஸ்டோரி’. கேரளா​வில் 32 ஆயிரம் இந்​துப் பெண்​களை மதமாற்​றம் செய்​து, தீவிரவாத நடவடிக்​கை​யில் ஈடு​படுத்​தி​ய​தாகவும், அவர்களைத் தீவிர​வா​தி​களுக்கு பாலியல் அடிமை​களாகப் பயன்​படுத்​து​வ​தாக​வும் அந்​தப் படத்​தில் காட்​சிகள் இடம்​பெற்றன.

அதில் அடா சர்​மா, சித்தி இட்​னானி உள்​ளிட்ட பலர் நடித்திருந்​தனர். இந்​தப் படத்​துக்கு நாடு முழு​வதும் கடும் எதிர்ப்பு கிளம்​பியது. சில மாநிலங்​களில் இந்​தப் படம் தடை செய்​யப்​பட்​டது.இந்​நிலை​யில் இந்​தப் படத்​தின் அடுத்த பாகம் ‘த கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ என்ற பெயரில் உரு​வாகி இருக்​கிறது. பிப்​.27-ல் வெளி​யாக இருக்​கும் இதை கமக்யா நாராயண் சிங் இயக்கி உள்​ளார்.

          

இதன் டிரெய்​லர் வெளி​யாகி​யுள்​ளது. முதல் பாகத்​தைப் போலவே இதி​லும் சர்ச்சை வசனங்​கள் இடம் பெற்றுள்ளன. இந்​துப் பெண்​களை மதம் மாற்​று​வது தொடர்​பான வசனங்​களும், கட்​டாயப்​படுத்தி மாட்டிறைச்சி சாப்​பிட வைப்​பது போன்ற காட்​சிகளும் சர்ச்சையை ஏற்​படுத்​தி​யுள்​ளன.

கேரள முதல்​வர் பின​ராயி விஜயன் இப்​படத்​தைக் கடுமையாக விமர்​சித்​துள்​ளார். “முதல் பாகத்​தின் வகுப்புவாத அஜெண்​டாவை​யும் அப்​பட்​ட​மான பொய்களை​யும் ஏற்​கெனவே மக்​கள் புரிந்து வைத்திருக்கின்​றனர். நமது மதச்​சார்​பற்ற கட்டமைப்பைச் சிதைக்​கும் இந்த முயற்​சி​யை​யும் கேரளா நிராகரிக்​கும். வகுப்​பு​வாத மோதல்​களைத் தூண்​டும் இத்தகைய புனையப்​பட்ட கதைகளுக்கு அனு​மதி வழங்குவது அதிர்ச்​சி​யளிக்​கிறது” என கூறி​யுள்​ளார்.

இந்​நிலை​யில், கேரளாவை தவறாக சித்​தரிக்​கும் வகையில் இப்​படம் உரு​வாக்​கப் பட்​டிருப்​ப​தாகக் கூறி கேரள மாநிலம் கண்​ணூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த தேவ் நம்​பூ​திரி என்​பவர் கேரள உயர்​நீ​தி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசா​ரித்த உயர்​நீ​தி​மன்​றம், மத்​திய தகவல் மற்​றும் ஒளிபரப்பு அமைச்​சகம், திரைப்பட தணிக்கை வாரி​யம் மற்​றும் படத்​தின் தயாரிப்​பாளர் ஆகியோ​ருக்கு நோட்​டீஸ் அனுப்ப உத்​தர​விட்டு வழக்கை பிப். 24-ம் தேதிக்கு தள்ளிவைத்​தது. இதனால் இப்​படம் பிப். 27-ம் தேதி திட்​ட​மிட்​டபடி திரைக்கு வரு​வ​தில் சிக்​கல் எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT