இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், ‘எல்லம்மா’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். ‘பலகாம்’ என்ற படத்தை தெலுங்கில் இயக்கிய வேணு எல்டண்டாடி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, சிரிஷ் தயாரிக்கின்றனர். இதன் டைட்டில் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் பார்சி என்ற கதாபாத்திரத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் ஹீரோவாக நடிக்கிறார். இப்படம் தெலுங்கு, தமிழ் உள்பட 5 மொழிகளில் உருவாகிறது.
இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் இப்படத்தில் இருந்து விலகிஉள்ளார். அவருக்குப் பதிலாக சாய் பல்லவி உள்பட பல நடிகைகளிடம் பேசி வந்தனர். இப்போது பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க இருக்கிறார். ‘காந்தா’ படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார்.