தென்னிந்திய சினிமா

‘கேடி’ பட பாடல் சர்ச்சை: ஆதரவற்ற பெண் குழந்தைகளின் கல்விக்கு நிதி உதவி வழங்குகிறார் நோரா ஃபதேஹி

செய்திப்பிரிவு

கன்​னடத்​தில் உரு​வான ‘கேடி : தி டெவில்’ என்ற படத்​தில் துருவா சர்​ஜா, சஞ்​சய் தத், ஷில்பா ஷெட்​டி, வி.ர​விச்​சந்​திரன், ரமேஷ் அரவிந்த் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்.‌ பிரேம் இயக்​கிய இப்படத்​தின் இந்​திப் பதிப்​பில் இடம்​பெற்​றிருந்த குத்துப் பாடல் சர்ச்​சை​யில் சிக்​கியது. அப்​பாடலில் நோரா ஃபதேஹி, சஞ்​சய் தத் இணைந்து ஆடி​யிருந்​தனர்.

ஆபாச​மான வார்த்​தைகள் இருப்​ப​தாக கடும் கண்​டனங்​கள் எழுந்​ததை அடுத்து மத்​திய தகவல் மற்​றும் ஒலிபரப்​புத் துறை அமைச்​சகம் இந்​தப் பாடலுக்கு தடை விதித்​தது. அப்​பாடல் யூடியூப் தளத்​திலிருந்து நீக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் தேசிய மகளிர் ஆணை​யம் தானாக முன்​வந்து வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கிறது. இப்​பாடல் சர்ச்சை குறித்து விளக்​கம் அளித்த நோரா ஃபதேஹி, இப்பாடலின் கன்னட பதிப்​பில் மட்​டுமே தான் நடித்​த​தாக​வும் இந்​திப் பாடல் பற்றி ஏதும் தெரி​யாது என்​றும் கூறி​யிருந்​தார்.

இப்​பாடல் விவ​காரத்​தில் ஏப்​ரல் மாதம் சஞ்​சய் தத் ஆஜராகி மன்னிப்​புக் கோரி​யிருந்​தார். தனது செயலுக்கு வருத்​தம் தெரிவிக்​கும் வகை​யில், 50 பழங்​குடி​யின பெண் குழந்​தைகளின் கல்​விச் செலவை ஏற்​ப​தாக உறு​தி​யளித்​திருந்​தார். அவரைத் தொடர்ந்து நேற்று முன் தினம் ஆஜரான நோரா ஃபதேஹி, இந்த விவ​காரத்​துக்​காக மன்​னிப்​புக் கேட்​டார். பின்​னர் ஆதர​வற்ற பெண் குழந்​தைகளின் கல்விக்கு நிதி உதவி வழங்​கப்​போவ​தாகத் தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT