‘கல்கி 2’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அமிதாப் பச்சன் – கமல் இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல், பிரபாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் கதை இன்னும் முடிவடையாத காரணத்தால், 2-ம் பாகம் எப்போது படப்பிடிப்பு என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் அமிதாப் பச்சன் – கமல் இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். நீண்ட வருடங்கள் கழித்து கமலுடன் இணைந்து நடிக்கவிருப்பது குறித்த மகிழ்ச்சியை தனது Tumblr இணையத்தில் வெளிப்படுத்தியுள்ளார் அமிதாப் பச்சன். 1985-ம் ஆண்டு வெளியான ‘Geraftaar’ படத்துக்குப் பிறகு அமிதாப் பச்சன் – கமல் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தில் கமல் வில்லனாக நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
‘கல்கி 2898 ஏடி 2’ படத்தின் படப்பிடிப்பு 10 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் தீபிகா படுகோன் விலகிவிட்டதால், அவருக்கு பதிலாக சாய் பல்லவி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தினை போலவே இரண்டாம் பாகத்தினையும் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம்.