‘வாரணாசி’ கதையில் சயின்ஸ் பிக்சன் இருக்கிறதா என்ற கேள்விக்கு ராஜமெளலி விளக்கம் அளித்துள்ளார்.
ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வாரணாசி’. இதன் 50% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதன் அறிமுக டீஸரை முன்வைத்து, இப்படத்தின் கதை சயின்ஸ் பிக்சன் கலந்தது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.
இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் ராஜமெளலி. அதில் ‘வாரணாசி’ படத்தின் கதையில் சயின்ஸ் பிக்சன் கிடையாது. இது புராணம் மற்றும் பேண்டஸி கலந்த கதை என்று கூறியிருக்கிறார். மேலும், பிரித்விராஜ் உட்கார்ந்திருக்கும் சேரை முன்வைத்து இந்த மாதிரி விஷயங்கள் வெளியாகின்றன. அது கதையில் அவரது கதாபாத்திரத்தை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் ராஜமெளலி.
அடுத்த ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை ஜூலையில் முடிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதால், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒட்டுமொத்த பணிகளையும் முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது படக்குழு.