தென்னிந்திய சினிமா

‘பள்ளிச்சட்டம்பி’ உண்மைக் கதையா ?

நிலா

டொவினோ தாமஸ், கயாது லோஹர் நடிக்கும் படம் ‘பள்ளிச்சட்டம்பி’. டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ள இப்படத்தை வேர்ல்ட் வைட் ஃபிலிம்ஸ் சார்பில் நவுஃபல் மற்றும் பிரிஜீஷ், சி க்யூப் ப்ரோஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சாணக்கியா சைதன்யா சரண் தயாரித்துள்ளனர்.

இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஏப்.10-ல் வெளியாகிறது. இதை தமிழகம் முழுவதும் சக்ரா பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

          

டொவினோ தாமஸ் கூறும்போது, “இதன் படப்பிடிப்பு 100 நாட்களுக்கு மேல் நூற்றுக்கணக்கான நடிகர்களுடன் நடைபெற்றது. இது எளிதான காரியம் அல்ல, இதற்குக் கடின உழைப்பும் திட்டமிடலும் தேவை. இது 1957- 58 கால கட்டத்தைச் சார்ந்த படம்.

அந்த காலகட்டத்தில் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு, கதையின் பின்னணியில் இடம்பெறும். இது உண்மைச் சம்பவம் அல்ல. சில சம்பவங்களைத் தழுவி நிறைய கற்பனையான கதாபாத்திரங்களுடன் திரைக் கதையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படம் ரசிகர்களை ஏமாற்றாது” என்றார்.

SCROLL FOR NEXT