உ.பி.யில் முதல்வர் யோகி ஆட்சியில் 17 ஆயிரம் தொழிற்சாலைகள் தொடக்கம்

உ.பி.யில் முதல்வர் யோகி ஆட்சியில் 17 ஆயிரம் தொழிற்சாலைகள் தொடக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் முதல்​வர் யோகி தலைமையிலான பாஜக ஆட்​சி​யில் தொழில் புரட்சி புதிய உச்சத்தை எட்​டி​யுள்​ளது.

இந்​தியா சுதந்​திரம் அடைந்த பிறகு உ.பி.​யில் கடந்த 70 ஆண்டுகளில் (1947 முதல் மார்ச் 2017 வரை), 14,178 தொழிற்சாலைகள் மட்​டுமே பதிவு செய்​யப்​பட்​டிருந்​தன. இந்நிலை​யில் முதல்​வ​ராக யோகி பதவி​யேற்ற 2017 ஏப்​ரல் முதல் மாநிலத்​தில் 17,841 புதிய தொழிற்​சாலைகள் பதிவு செய்யப்பட்டுள்​ளன. யோகி அரசின் இந்த சாதனை மிக​வும் குறிப்பிடத்​தக்​க​தாகக் கருதப்​படு​கிறது.

இது குறித்து தொழிலா​ளர் மற்​றும் வேலை ​வாய்ப்​புத் துறை​யின் முதன்​மைச் செய​லா​ள​ரான தமிழர் எம்​.கே. சண்​முக சுந்​தரம் கூறும்போது, "முதல்​வர் யோகி அரசு, எளி​தான வணி​கம் செய்​தல், முதலீட்​டாளர்​களுக்கு உகந்த சூழலை உரு​வாக்​குதல், வெளிப்​படை​யான செயல்​முறை​கள் ஆகிய​வற்​றில் கவனம் செலுத்தி வருகிறது. முதலீட்​டாளர்​களை ஈர்க்​கும் வகை​யில், ஒற்​றைச்சாளர முறை, இணை​ய​ வழி அனு​ம​தி​கள், நில வங்​கி​கள், மேம்​பட்ட சட்டம்​- ஒழுங்கு மற்​றும் வலு​வான உள்​கட்​டமைப்பு போன்ற வசதிகளை உரு​வாக்​கி​யுள்​ளது.

இதனால் இந்​தியா மற்​றும் வெளி​நாட்டு முதலீட்​டாளர்​கள் உ.பி. மீது நம்​பிக்கை கொண்​டுள்​ளனர். செப்​டம்​பர் 2023 முதல் தற்போது வரை மட்​டும், 10,194 தொழிற்​சாலைகள் பதிவு செய்யப்பட்​டுள்​ளன. நடப்பு நிதி​யாண்​டில் 4,746 புதிய தொழிற்​சாலைகள் சேர்க்​கப்​பட்​டுள்​ளன. ஏப்​ரல் 2017க்​குப் பிறகு பதிவு செய்​யப்​பட்ட இந்​தத் தொழிற்​சாலைகள், தற்​போது 16,53,179 பேருக்கு வேலை​ வாய்ப்பு அளித்து வரு​கின்​றன. இவர்​களில் 15,29,907 பேர் ஆண்​கள்; 1,23,272 பேர் பெண்​கள் ஆவர்" என்​றார்.

தொழிற்​சாலைகளில் பணிபுரி​யும் பெண்​களின் எண்​ணிக்கை சீராக அதி​கரித்து வரு​கிறது. மாநிலத்​தில் பாது​காப்​பான சூழலை யோகி அரசு உறுதி செய்​திருப்​ப​தால் முதலீட்​டாளர்​களின் நம்பிக்கை அதி​கரித்​துள்​ளது. உ.பி.​யின் விரைவுச் சாலைகள், பாது​காப்​புத் தாழ்​வாரங்​கள், விமான நிலை​யங்​கள், சரக்கு போக்கு​வரத்து மையங்​கள் போன்ற முக்​கிய உள் ​கட்​டமைப்​புத் திட்​டங்​கள் தொழில்​ துறைக்கு புதிய உத்​வேகத்தை அளித்துள்ளன. இந்த முயற்​சிகளின் விளை​வாக, உ.பி. இனி வெறும் விவ​சாய மாநில​மாக மட்​டும் இல்​லாமல், தொழில்​ துறை மாநில​மாக​வும் உரு​வெடுத்​து வரு​வ​தாக கருதப்​படுகிறது.

உ.பி.யில் முதல்வர் யோகி ஆட்சியில் 17 ஆயிரம் தொழிற்சாலைகள் தொடக்கம்
சுந்தர்.சி என்ட்ரி... பிடிஆருக்கு டஃப்? - மதுரை மத்திய தொகுதி களம் எப்படி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in