தென்னிந்திய சினிமா

“முட்​டாள்​தன​மான 3 திருமணங்களுக்​காக 17 ஆண்டுகளை வீணடித்தேன்” - மீரா வாசுதேவன்

நிலா

தமிழில் ‘உன்​னைச் சரணடைந்​தேன்’ படத்​தில் நாயகி​யாக நடித்தவர் மீரா வாசுதேவன். ஜெர்​ரி, ஆட்​ட​நாயகன், அடங்க மறு உள்ளிட்ட பல படங்​களில் நடித்​துள்ள மீரா வாசுதேவன், மலையாளம், இந்​தி, தெலுங்கு படங்​களி​லும் நடித்​துள்​ளார். அவர், கடந்த 2005-ம் ஆண்டு ஒளிப்​ப​தி​வாளர் அசோக் குமார் மகன் விஷால் அகர்​வாலைத் திரு​மணம் செய்து கொண்​டார். 2010-ல் விவாகரத்து செய்​தார்.

பின்​னர் நடிகர் ஜான் கொக்​கெனை 2012-ம் ஆண்டு திரு​மணம் செய்​தார். இவர்​களுக்கு அரிஹா ஜான் என்ற மகன் உள்​ளார். 2016-ம் ஆண்டு இரு​வரும் பிரிந்​தனர். பின்​னர் ஒளிப்​ப​தி​வாளர் விபின் என்​பவரை 2024-ல் திரு​மணம் செய்​தார். பின்​னர் அவரை​யும் பிரிந்​தார். இந்​நிலை​யில் மீரா வாசுதேவன் கூறும்​போது, “3 திருமணங்கள் தோல்​வியடைந்த ஒரு பெண் என்று இந்​தச் சமூகம் என்னை முத்​திரை குத்​தும்​போது, அதை என்​னால் கடந்து வர முடிந்​ததற்​குக் காரணம், மற்​றவர்களை பற்றி நான் கவலைப்படாதது​தான். இந்​தத் தெளிவு​தான், எனக்​குள் ஏற்​பட்ட பெரிய மாற்​றம்.

ஒரு துணை, நம்மை எப்​போது வேண்​டு​மா​னாலும் தூக்கி எறியக்​கூடிய ஒரு பொருளாகப் பார்க்​கும்​போதோ, அல்​லது குடும்​பத்துக்கும் மகனுக்​கும் அச்​சுறுத்​தலாக மாறும்​ போதோ, அந்​தப் பந்​தத்​தில் தொடர்ந்து நீடிப்​பது தற்​கொலைக்​குச் சமமானது.நான் எனது மகனிடம் அடிக்​கடி சொல்​வதுண்​டு, ‘என் வாழ்க்​கை​யின் 17 ஆண்​டு​களை 3 முட்​டாள்​தன​மான திரு​மணங்​களுக்​காக வீணடித்து​விட்​டேன்’ என்​று.

அந்த நேரத்​தைப் புத்​தி​சாலித்​தன​மாகப் பயன்​படுத்​தி​யிருந்​தால், எனக்​குப் பிடித்த விஷ​யங்​களில் கவனம் செலுத்தி இன்​னும் எவ்​வளவோ சா​தித்​திருக்க முடி​யும். என் அப்​பா, அம்​மா, சகோதரியுடன் அதிக நேரத்​தைச் செல​விட்​டிருக்​கலாம்​. அதற்​குப்​ பதிலாக, என்​னை மதிக்​காத, தீவிர​மாக எடுத்​துக்​ கொள்​ளாத நபர்களுக்​காக அந்​தப்​ பொன்​னான நேரத்​தை வீணடித்துவிட்டேன்​” என்​று வருத்​தத்​துடன்​ தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT