தென்னிந்திய சினிமா

விஜய் தேவர​கொண்டா படத்துக்கு ஹாலிவுட் ஒளிப்பதி​வாளர்

நிலா

விஜய் தேவர​கொண்டா இப்​போது ‘ரண​பாலி’ என்ற படத்​தில் நடித்து வரு​கிறார். இதில் அவர் ஜோடி​யாக ராஷ்மிகா மந்​தனா நடிக்​கிறார்.

வரலாற்று பின்​னணி​யில் உரு​வாகும் இப்​படத்தை அடுத்து அவர் நடிக்​கும் படத்தை ‘ஹாய் நன்​னா’வை இயக்​கிய சவுர்​யுவ் இயக்​கு​கிறார். வைரா நிறு​வனம் சார்​பில் டாக்​டர் வியேந்​தர் ரெட்டி தயாரிக்​கிறார். இன்​னும் பெயரிடப்​ப​டாத இந்​தப் படத்​தில் சர்​வ​தேச கலைஞர்​கள் சிலர் பணி​யாற்​றுகின்​றனர்.

‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’, ‘ஃபால் அவுட்’ போன்ற உலகளா​விய படைப்​பு​களுக்​காக அறியப்​படும் அலெக்​சாண்​டர் மார்ட்​டினஸ் இப்​படத்​துக்கு ஒளிப்​ப​திவு செய்​கிறார். ‘காட்ஸ் ஆஃப் எகிப்​து’, ‘பேட்​மேன் பார் எவர் ‘ஸ்​னோபிர்​சர் போன்ற படங்​களின் பின்​னணி​யில் செயல்​பட்ட எரிக் டர்​ஸ்ட் இதன் விஎஃப்​எக்ஸ் பணி​களைக் கவனிக்​கிறார். ஹேஷம் அப்​துல் வஹாப் இசை அமைக்​கிறார்.

இப்​படத்​தின் அறி​விப்பு போஸ்​டர் வெளி​யாகி இருக்​கிறது. அதில் விஜய் தேவர​கொண்டா நாய்​களைப் பிடித்​த​படி செல்​கிறார். இயக்​குநர் குதிரையைப் பிடித்​த​படி​யும் மற்​றவர்​கள் ஆயுதங்​களைத் தாங்​கியபடி​யும் செல்​கின்​றனர். “இந்த எல்லா கோப​மும் ஒரு​காலத்​தில் அன்​பாக இருந்​தது” என்று டேக் லைன் வைத்​துள்​ளனர். இந்த போஸ்​டர் இணை​யத்​தில் பரவி வரு​கிறது.

SCROLL FOR NEXT