‘புஷ்பா 2’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார், அல்லு அர்ஜுன். இப்படத்துக்கு ‘ராக்கா’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு இதன் டைட்டிலும் அவரின் வித்தியாசமான தோற்றமும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. சன் பிக்சர்ஸ் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்குர், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த சயின்ஸ் பிக் ஷன் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீபிகா படுகோன், 2-வது முறையாகத் தாய்மை அடைந்துள்ளார்.
தாய்மை பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வந்திருப்பதை அவரின் மகள் துவா, கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இதை அறிவித்துள்ளனர்.
இது பற்றி அவர் தரப்பில் கூறும்போது, “தீபிகா படுகோன் இப்போது ‘ராக்கா’ படத்துக்கான தீவிரமான சண்டைக் காட்சிகளில் நடித்து வருகிறார். படப்பிடிப்பின் போது அவருக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
அவர் ஷாருக்கானின் ‘கிங்’ படத்தின் படப்பிடிப்பையும் முடிக்க வேண்டியிருக்கிறது. அவர் தாய்மை அடைந்திருந்தாலும் தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்பார்” என்று தெரிவித்துள்ளனர்.