நடிகர் நாகார்​ஜுனா

 
தென்னிந்திய சினிமா

‘ஹேக்’ பயத்தால் 15 நாளுக்கு ஒரு முறை பாஸ்வேர்டு மாற்​றும் நாகார்ஜுனா!

நிலா

தெலங்​கானா சைபர் பாது​காப்பு பீரோ சார்​பில் ஹைத​ரா​பாத்​தில் ஏற்​பாடு செய்​யப்​பட்ட விழிப்​புணர்வு நிகழ்ச்​சி​யில் நாகார்​ஜுனா கலந்​து​கொண்​டார்.

அப்​போதுஅவர் கூறிய​தாவது: என் தொலைபேசியை யாராவது ஹேக் செய்து விடு​வார்​களோ என்ற பயம் எப்​போதும் இருக்​கிறது. பாது​காப்​புக்​காக 15 நாட்​களுக்கு ஒரு​முறை எனது பாஸ்​வேர்டை மாற்றி விடு​கிறேன். வீட்டு ‘வைஃபை’ பாஸ்​வேர்​டை​யும், மாதம் ஒரு முறை அல்​லது 2 மாதங்​களுக்கு ஒரு​முறை மாற்​றுகிறேன். பிரபல​மாக இருப்​ப​தால் கவன​மாக இருக்க வேண்​டிய கட்​டா​யம் இருக்​கிறது. அதனால் போனில் தனிப்​பட்ட புகைப்​படங்​கள் எதையும் வைத்​துக் கொள்​வ​தில்​லை.

சில ஆண்​டு​களுக்கு முன்​பு, வங்கி அதி​காரி என்று கூறிக்​ ஒரு​வர் தொலைபேசி​யில் அழைத்​து, பங்​கு​கள் மற்​றும் ஈக்​விட்​டிகளில் முதலீடு செய்​வது பற்றி பேசி​னார். நான் சம்​ம​திக்​காத​போதும் தொடர்ந்து வற்​புறுத்​தி​னார். அது சந்​தேகத்தை ஏற்​படுத்​தி​யது. இது​போன்ற முதலீடு தொடர்​பான தகவல்​கள் வழக்​க​மாக எனது தனிப்பட்ட மானேஜர் மூல​மாகவே எனக்கு வரும். இந்​தச் சம்பவத்துக்கு பிறகு, முன்​பின் தெரி​யாத அழைப்​பு​கள் மற்​றும் இணை​யப் பாது​காப்பு விஷ​யங்​களில் எச்​சரிக்​கை​யாக இருக்​கத் தொடங்​கினேன். என் உறவினர் ஒரு​வரும் இது​போன்ற சைபர் மோசடி​யில் சிக்​கி​னார். கஸ்​டம்ஸ் அதி​காரி​கள் எனக் கூறி அழைப்பு வந்​தது.

ஈரானுக்கு அனுப்​பப்​பட்ட பார்​சல் ஒன்​றில் போதைப் ​பொருட்​கள் இருப்​ப​தாக மோசடி நபர்​கள் தெரி​வித்​து, சுமார் 6 முதல் 7 மணி நேரம் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் அவரை மன ரீ​தி​யாக அச்சுறுத்தினர். அதிர்​ஷ்ட​வச​மாக, சைபர் க்ரைம் துறையைத் தொடர்​பு​கொண்டு தகவல் தெரி​வித்​த​தால் மோசடி அங்​கேயே தடுக்​கப்​பட்​டது. இது போன்ற மோசடிகள் சாதாரண பொது ​மக்களுக்​கும் நடக்​கிறது. சைபர் குற்​றங்​களைத் தடுப்​ப​தில் தெலங்​கானா போலீ​ஸார் நாட்​டிலேயே முன்​னணி​யில் இருக்கின்றனர். இவ்​வாறு நாகார்​ஜுனா கூறி​னார்.

SCROLL FOR NEXT