தென்னிந்திய சினிமா

‘த்ரிஷ்யம் 3’ புதிய வெளியீட்டு தேதி முடிவு

ஸ்டார்க்கர்

மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் புதிய வெளியீட்டு தேதியை முடிவு செய்துள்ளது படக்குழு.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’த்ரிஷ்யம் 3‘. முதல் 2 பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியினால், இந்த பாகத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதனை ஆசீர்வாத் சினிமாஸ், பென் ஸ்டூடியோஸ் மற்றும் பனோரமா ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

போர் பதற்றம் மற்றும் உரிமைகள் விற்பனை போன்ற சிக்கல்களால் திட்டமிட்டப்படி வெளியிட முடியாமல் இருந்தது. தற்போது இப்படம் மே 21-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தப் பாகத்துடன் இந்தக் கதையும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் மோகன்லால் உடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக சதீஷ் குரூப், இசையமைப்பாளராக அனில் ஜான்சன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

SCROLL FOR NEXT