தென்னிந்திய சினிமா

100-வது படத்​தில் மோகன்​லாலின் தந்​தை​யாக நடிக்க புதுமுகம் தேடும் பிரியதர்​ஷன்

நிலா

பிரியதர்​ஷன் இயக்​கும் அவருடைய 100-வது படத்​தில் மோகன்லால் கதா​நாயக​னாக நடிக்​கிறார். ‘தனது முதல் பட கதா​நாயகனே 100-வது படத்​தி​லும் நாயக​னாக நடிப்​பது பெரு​மை; இது​போன்று சினிமா வரலாற்​றில் ஒரு​போதும் நடந்​த​தில்​லை’ என்று பிரியதர்​ஷன் கூறி​யிருந்​தார்.

இந்​நிலை​யில் இப்​படம் பற்றி பேசி​யுள்ள அவர், “இது கர்​னாடக இசை பின்​னணி​யில் இசைக்கு முக்​கி​யத்​து​வம் கொடுத்து உருவாகும் படம். அப்​பா- மகனை பற்​றிய கதையைக் கொண்ட படம். இதில் 12 பாடல்​கள் இடம்​பெறும். கமர்​ஷியல் அம்சங்களையும் விறு​விறுப்​பான சண்​டைக் காட்​சிகளை​யும் இணைத்த கதைக்​களத்​தைக் கொண்​டிருக்​கும். படப்​பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்​ளது.

மோகன்​லாலின் தந்​தை​யாக நடிப்​ப​தற்​குப் புது​முகத்​தைத் தேடி வரு​கிறோம். கர்​னாடக மற்​றும் இந்​துஸ்​தானி இசை மட்​டுமின்​றி, கதகளி கலை​யிலும் தேர்ச்சி பெற்ற முதிய கலைஞர் தேவைப்படுகிறார். எஸ்​.பி.​பாலசுப்​பிரமணி​யம் உயிருடன் இருந்திருந்​தால், இப்​பாத்​திரத்​துக்கு அவரைத்​தான் அணுகியிருப்பேன்” என்​றார். இப்​படத்தை ஆசிர்​வாத் சினி​மாஸ் சார்​பில் ஆண்​டனி பெரும்​பாவூர் தயாரிக்​கிறார்.

SCROLL FOR NEXT