தென்னிந்திய சினிமா

‘த ராஜா சாப்’ படத்துக்காக சம்பளம் குறைத்தார் பிரபாஸ்?

செய்திப்பிரிவு

பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள ரொமான்டிக் ஹாரர் காமெடி படம், ‘த ராஜா சாப்’. மாருதி இயக்கி உள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார், சஞ்சய் தத் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜன.9-ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் அள்ளி வருகிறது.

முதல் நாளில் ரூ.54 கோடி வசூலித்த இப்படம், 2 நாட்களில் ரூ.108 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்​தப் படத்தின் பட்​ஜெட் அதி​க​மான​தால் தனது சம்பளத்தை பிர​பாஸ் குறைத்​துக் கொண்​ட​தாகச் செய்திகள் வெளி​யாகி​யுள்​ளன.

வழக்​க​மாக ரூ.150 கோடி சம்​பளம் வாங்​கும் பிர​பாஸ் இப்படத்​தின் கிராபிக்ஸ் உள்​ளிட்ட பணி​களுக்கு அதி​கம் செல​வான​தால் ரூ.100 கோடி மட்டுமே சம்​பளம் பெற்​றுக் கொண்​ட​தாகக் கூறுகின்றனர். இப்​படத்​துக்​காக மாளவிகா மோக​னன் ரூ.2 கோடி​யும், சஞ்​சய் தத் ரூ.5 முதல் 6 கோடி​யும் ஊதி​யம் பெற்ற​தாக​வும் கூறப்​படு​கிறது.

          
SCROLL FOR NEXT