கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்ற ‘உத்சவ் 2026’ விழாவில் நடிகர் ரவி மோகனுக்கு ‘தேவி ரத்னா’ விருது வழங்கப்பட்டது.
பாலக்காட்டில் உள்ள பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ மீன் குளத்தி பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரவி மோகன், கெனிஷா கலந்து கொண்டனர்.
தமிழ் சினிமாவுக்கு ரவி மோகன் ஆற்றிய பங்களிப்பு, ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. விருதுடன் ஒரு லட்சம் ரொக்கம், தங்கச் சின்னம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கெனிஷாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.