தென்னிந்திய சினிமா

‘டாக்​ஸிக்’ திரைப்பட டீஸர் சர்ச்சை: கீது மோகன்​தாஸ் மீது கடும் விமர்​சனம்

செய்திப்பிரிவு

கீது மோகன்​தாஸ் இயக்​கத்​தில் யாஷ் நடித்​துள்ள படம், ‘த டாக்ஸிக்’. ஆங்​கிலம் மற்​றும் கன்​னடத்​தில் உரு​வாகி​யுள்ள இப்​படம் தமிழ் உள்​ளிட்ட மொழிகளில் மொழி ​மாற்​றம் செய்​யப்​பட்டு வெளி​யாக இருக்​கிறது.

மார்ச் 19-ல் ரிலீ​ஸாகும் இப்​படத்​தில் கியாரா அத்​வானி, நயன்​தா​ரா, ஹூமா குரேஷி, ருக்​மணி வசந்த், தாரா சுதா​ரியா உள்பட பலர் நடித்​துள்​ளனர். இவர்​களின் கதா​பாத்​திர போஸ்​டர்​கள் வெளி​யிடப்​பட்ட நிலை​யில் யாஷின் பிறந்த நாளை முன்​னிட்டு அவருடைய கதா​பாத்​திர போஸ்​டரும் டீஸரும் வெளி​யிடப்​பட்​டது. இதில் அவர் ‘ராயா’ என்ற கதா​பாத்​திரத்​தில் நடித்​துள்​ளார்.

இந்​நிலை​யில் யாஷ் பற்றி கீது மோகன்​தாஸ் கூறும்​போது, “திறமை​யும் சூப்​பர்​ ஸ்​டார் அந்​தஸ்​தும் ஒன்​றாக அமைவது அபூர்​வ​மான மற்​றும் வலிமை​யான கலவை​யாகும். அப்​படிப்​பட்ட யாஷ் குறித்து பெரு​மைப்​படு​கிறேன். உலகம் விரைவில் காண​விருக்​கும் ‘ரா​யா’ கதா​பாத்​திரத்​தில் அவர் நடிப்பு மட்​டுமல்​லாமல், ஒவ்வொரு நாளும் அவருடைய அர்ப்​பணிப்​புக்​காக​வும் பெருமை கொள்​கிறேன்” என்று தெரி​வித்​துள்​ளார். இதற்​கிடையே இந்​தப் படத்​தின் டீஸர் கடும் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

மம்​மூட்டி நடித்த கசா​பா படம் 2016-ல் வெளி​யான​போது, அந்​தப் படத்​தில் பெண்​களை மோச​மாகச் சித்​தரித்​துள்​ள​தாக​வும் பெண் வெறுப்பு படம் என்​றும் அப்​படத்​தின் இயக்​குநர் நிதின் ரெஜி பணிக்​கரை கீது மோகன்​தாஸ் விமர்​சித்​திருந்​தார். இது அப்​போது பரபரப்​பாகப் பேசப்​பட்​டது. இப்​பேச்​சு, அந்​தப் படத்​தின் இயக்குநர் மற்​றும் கசாபா படம் மீதான சைபர் தாக்குதல்களுக்கும் வழி ​வகுத்​தது.

இந்​நிலை​யில் ‘டாக்​ஸிக்’ டீஸரில் புகைபிடிப்​பது, பெண்​களின் உடலில் மதுவை ஊற்​று​வது மற்​றும் ஆண்​மை​யைக் கொண்டாடுவது போன்ற காட்​சிகள் இருப்​ப​தாக சமூக ஊடகங்களில் கடும் விமர்​சனங்​கள் எழுந்​துள்​ளன. இப்​படியொரு மோச​மான காட்சியை வைத்​தது ஏன் என்​றும் அதை விளம்​பரப்​படுத்​து​வது என்ன மாதிரி​யான மனநிலை என்​றும் ரசிகர்​கள் கேள்வி எழுப்பியுள்​ளனர். சில மலை​யாள இயக்​குநர்​களும் கடுமை​யாக விமர்​சித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT