சிரஞ்சீவி

 
தென்னிந்திய சினிமா

தெலுங்கில் வசூல் குவிக்கும் சிரஞ்சீவியின் ‘மன சங்கர வர பிரசாத் காரு’!

செய்திப்பிரிவு

நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள தெலுங்கு படம், ‘மன சங்கர வர பிரசாத் காரு’. இதில் நயன்தாரா, கேத்ரீன் தெரசா, வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் கலந்து உருவான இப்படத்தை அனில் ரவுபுடி இயக்கியுள்ளார். ஜன.12ம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப்படம் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. தெலுங்கு மாநிலங்களில் 5 நாளில் அதிகம் வசூலித்த முதல் திரைப்படமாக இது புதிய சாதனை படைத்துள்ளது. வெளியான 5 நாட்களில் இப்படம் ரூ.226 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. 5-ம் நாளில் மட்டுமே ரூ.36 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள் ளது என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவி நடித்து இதற்கு முன் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் இப்படத்தின் வெற்றி அவருக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

இதற்கிடையே ஜன.9-ம் தேதி வெளியான பிரபாஸின் ‘த ராஜா சாப்’ திரைப்படம் ரூ.238 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT