மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் அபார வெற்றிக்கான காரணம் என்ன?

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் அபார வெற்றிக்கான காரணம் என்ன?
Updated on
2 min read

மும்பை: ம​கா​ராஷ்டி​ரா​வின் 29 மாநக​ராட்​சிகளுக்கு கடந்த 15-ம் தேதி தேர்​தல் நடை​பெற்​றது. இதில் பாஜக மட்​டுமே அபார வெற்றி பெற்​றிருக்​கிறது. பாஜக​வின் கூட்​டணி கட்​சிகளான ஏக்​நாத் ஷிண்டேயின் சிவசே​னா, அஜித் பவாரின் தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்​சிகள் பின்​னடைவை சந்​தித்து உள்​ளன.

மகா​ராஷ்டி​ரா​வின் 29 மாநக​ராட்​சிகளில் மொத்​தம் 2,869 வார்​டு​கள் உள்​ளன. இதில் பாஜக 1,421 வார்​டு​களை கைப்​பற்றி உள்​ளது. ஏக்​நாத் ஷிண்​டே​வின் சிவசேனா கட்​சிக்கு 367, காங்​கிரஸுக்கு 327, உத்​தவ் தாக்​கரே​வின் சிவசே​னா​வுக்கு 173, அஜித்​ ப​வாரின் தேசி​ய​வாத காங்​கிரஸுக்கு 161, சரத் பவாரின் தேசி​ய​வாத காங்​கிரஸுக்கு 29, மகா​ராஷ்டிர நவநிர்​மாண் சேனாவுக்கு 13 வார்​டு​கள் கிடைத்​துள்​ளன.

இதுதொடர்​பாக அரசி​யல் நோக்​கர்​கள் கூறிய​தாவது: மகா​ராஷ்டி​ரா​வில் பாஜக கூட்​டணி ஆட்சி நடை​பெறுகிறது. ஆனால் மாநக​ராட்சி தேர்​தலில் பாஜக கூட்​டணி கட்​சிகளிடையே கருத்து வேறு​பாடு​ எழுந்​தன.

மும்பை மாநக​ராட்சி தேர்​தலில் மட்​டும் பாஜக, சிவசேனா (ஷிண்​டே) கூட்​டணி அமைத்து போட்​டி​யிட்​டன. பல்​வேறு மாநக​ராட்​சிகளில் பாஜக கூட்​டணி கட்​சிகள் எதிரெ​திர் அணி​யாக போட்​டி​யிட்​டன.

இந்த சூழலில் கடந்த வெள்​ளிக்​கிழமை வெளி​யான தேர்​தல் முடிவு​களில் பாஜக மட்​டும் அபார வெற்றி பெற்​றிருக்​கிறது. மொத்​த​முள்ள 29 மாநக​ராட்​சிகளில், 17 மாநக​ராட்​சிகளில் அந்தக் கட்சி அறு​திப் பெரும்​பான்​மையை பெற்று உள்​ளது. ஷிண்டே கட்​சி​யுடன் இணைந்து மும்பை உட்பட மேலும் 8 மாநக​ராட்​சிகளை பாஜக கூட்​டணி கைப்​பற்றி இருக்​கிறது.

ஒரு காலத்​தில் மும்​பை, தானே பிராந்​தி​யங்​களில் பால் தாக்​கரே​வின் சிவசேனா மிக​வும் வலு​வாக இருந்​தது. சிவசேனா உடைந்த பிறகும் உத்​தவ் தாக்​கரே, ராஜ் தாக்​கரேவுக்கு இந்த பிராந்​தி​யங்​களில் செல்​வாக்கு நீடித்​தது. ஆனால் தற்​போதைய தேர்​தலில் மும்​பை, தானே பிராந்​தி​யங்​களில் தாக்​கரே குடும்ப கட்​சிகளை பின்​னுக்கு தள்ளி அசைக்க முடி​யாத சக்​தி​யாக பாஜக உரு​வெடுத்து இருக்​கிறது.

மகா​ராஷ்டி​ரா​வின் புனே, சோலாப்​பூர், கோலாப்​பூர் பிராந்​தி​யங்​களில் சரத் பவாரின் தேசி​ய​வாத காங்​கிரஸ் ஆதிக்​கம் செலுத்தி வந்​தது. அந்த கட்சி உடைந்த பிறகு சரத் பவார், அவரது தம்பி மகன் அஜித் பவார் இந்த பிராந்​தி​யங்​களில் ஆதிக்​கம் செலுத்தி வந்​தனர்.

தற்​போதைய மாநக​ராட்சி தேர்​தலில் சரத் பவாரும் அஜித் பவாரும் கூட்​டணி அமைத்து போட்​டி​யிட்​டனர். ஆனால் இரு​வருமே பெரும் பின்​னடைவை சந்​தித்து உள்​ளனர். புனே, சோலாப்​பூர், கோலாப்​பூரில் பாஜக​வின் செல்​வாக்கு கணிச​மாக உயர்ந்​திருக்​கிறது.

இந்த தேர்தலில் பாஜக மட்​டுமே அபார வெற்றி பெற்​றிருக்​கிறது. துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்​டே​வின் சிவசேனா தானே மாநக​ராட்​சி​யுடன் முடங்கி உள்​ளது. மற்​றொரு துணை முதல்​வர் அஜித் பவாரின் தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்சி ஒரு மாநக​ராட்​சி​யைக்​கூட கைப்​பற்​ற​வில்​லை.

மாநக​ராட்சித் தேர்​தலின்​போது சிவசேனா உத்​தவ் அணி​யின் வாக்​கு​கள், காங்​கிரஸ் மற்​றும் தேசி​ய​வாத காங்​கிரஸின் வாக்​கு​கள் பாஜக​வுக்கு கைமாறி இருக்​கிறது. இதன்​காரண​மாகவே உள்​ளாட்​சித் தேர்​தலில் பாஜக மட்​டும் அபார வெற்றி பெற்​றிருக்​கிறது. இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

மும்பையின் புதிய மேயர் யார்? - கடந்த 30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சி பால் தாக்கரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. முதல்முறையாக இந்த மாநகராட்சியை பாஜக கைப்பற்றி உள்ளது.

மொத்தமுள்ள 227 வார்டுகளில் பாஜக 89 வார்டுகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அதன் கூட்டணி கட்சியான ஏக்நாத் ஷிண்டே வின் சிவசேனா 29 வார்டுகளை கைப்பற்றி உள்ளது. மும்பை மாநகராட்சியில் அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க 114 கவுன்சிலர்கள் தேவை என்ற நிலையில் பாஜக கூட்டணிக்கு 118 கவுன்சிலர்களின் ஆதரவு உள்ளது. பாஜக மூத்த தலைவர்கள் தேஜஸ்வி, பிரகாஷ், பிரபாகர் ஷிண்டே, மகரந்த் நவரேகர், ராஜ் ஆகியோர் மேயர் பதவிக்கான போட்டியில் முன்வரிசையில் உள்ளனர். புதிய மேயரை தேர்வு செய்வது தொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கட்சி தலைமையுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

‘கடவுள் விரும்பினால்…’ - உத்தவ் பேச்சு: சிவசேனா (யுபிடி) தலை​வர் உத்​தவ் தாக்​கரே நேற்று கட்​சித் தொண்​டர்​கள் மத்​தி​யில் பேசி​ய​தாவது: மும்​பையை பாஜக அடமானம் வைக்க விரும்​பு​கிறது. துரோகத்​தின் மூலம் தேர்​தலில் வெற்றி பெற்​றுள்​ளது. இந்த பாவத்தை மராட்​டிய மக்கள் ஒரு​போதும் மன்​னிக்க மாட்​டார்கள். மும்​பை​யில் நமது கட்​சியின் மேயரை நிறு​வுவது எனது கனவு.

கடவுள் விரும்​பி​னால் அந்​தக் கனவு நனவாகும். நமது கட்​சியை ஒழித்​து​விட்​ட​தாக பாஜக நினைத்​தது. ஆனால் அது நடக்​க​வில்​லை. பாஜக அனைத்து வழிகளை​யும் பயன்​படுத்​தி​யது. ஆனால் விசு​வாசத்தை அக்​கட்​சி​யால் வாங்க முடிய​வில்​லை. இந்​தப் போர் முடிவடைய​வில்​லை, அது இப்​போது​தான் தொடங்​கி​யுள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் அபார வெற்றிக்கான காரணம் என்ன?
இந்தி திரைத்​ துறை​யில் பாகு​பா​டா? - சர்ச்​சை​யானது ஏ.ஆர்​.ரஹ்​மான் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in