தென்னிந்திய சினிமா

’அயலான்’ தெலுங்கு பதிப்பு நேரடியாக டிவியில் ஒளிபரப்பு!

ஸ்டார்க்கர்

சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ படத்தின் தெலுங்கு பதிப்பு நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

ஜனவரி 12, 2024-ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘அயலான்’. அனைத்து மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், இதன் தெலுங்கு பதிப்பு வெளியாகவில்லை. சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வியாபாரத்தில் நடத்த சிக்கல்களால் வெளியாகவில்லை. ‘அயலான்’ தெலுங்கு பதிப்பு ஓடிடி தளங்களிலும் வெளியிடப்படவில்லை.

இதனிடையே, டிசம்பர் 21-ம் தேதி ஜீ தெலுங்கு சேனலில் ‘அயலான்’ தெலுங்கு பதிப்பு ஒளிபரப்பாகவுள்ளது. இதுவே ‘அயலான்’ தெலுங்கு பதிப்பின் முதல் ஒளிபரப்பாகும். பல மாத காத்திருப்புக்கு பிறகு, தற்போது தான் ஒளிபரப்பாக இருக்கிறது. இதன் வீடியோ ஒன்றை வெளியிட்டு ஜீ தெலுங்கு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அயலான்’. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆர்.டி ராஜா தயாரிப்பில் உருவான இப்படத்தினை கே.ஜே.ஆர் ஸ்டூடியோ நிறுவனம் கைப்பற்றி வெளியிட்டது.

SCROLL FOR NEXT