தென்னிந்திய சினிமா

நண்பர்களை இணை தயாரிப்பாளர்கள் ஆக்கிய அல்லு அர்ஜுன்

ஸ்டார்க்கர்

அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தில் தனது நண்பர்களை இணை தயாரிப்பாளர்களாக களமிறக்கி இருக்கிறார்.

’ராக்கா’ படத்துக்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் அல்லு அர்ஜுன். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த புதிய படத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, அல்லு அர்ஜுனின் நெருங்கிய நான்கு நண்பர்களும் இணைத் தயாரிப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அல்லு அர்ஜுனின் நண்பர்களான பன்னி வாஸ், சந்தீப் ராமினேனி, நட்ராஜ் மற்றும் சிறுவயது தோழியுமான ஸ்வாதியும் லோகேஷ் கனகராஜ் படத்தில் இணை தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்ததுள்ளது. அதுமட்டுமன்றி, அல்லு அர்ஜுனின் இந்த செயலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT