அஜித்தின் அடுத்த 3 படங்கள் முடிவு

அஜித்தின் அடுத்த 3 படங்கள் முடிவு
Updated on
1 min read

அஜித் நடிப்பில் உருவாகும் அடுத்த 3 படங்களை முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

’குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு, தனது அடுத்த படம் என்ன என்பதை அறிவிக்காமல் இருக்கிறார் அஜித். ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குநர் என்றாலும், பட்ஜெட் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட பிரச்சினைகளால் இப்படம் அறிவிக்கப்படாமல் உள்ளது. தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் படத்தை அஜித்தே நடித்து தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி இந்த மாதத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இப்படத்தை டிசம்பர் மாதத்துக்குள் முடித்துவிட திட்டமிட்டுள்ளார் அஜித்.

அதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மங்காத்தா 2’ படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘மங்காத்தா 2’ படத்தைத் தொடர்ந்து, சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு கோடைக்குப் பிறகு இருக்கும் என கூறப்படுகிறது.

சில மாதங்கள் கார் பந்தயத்தில் முழுமையாக இறங்கிவிட்டதால், தற்போது முழுவீச்சில் தொடர்ச்சியாக 3 படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார் அஜித்.

அஜித்தின் அடுத்த 3 படங்கள் முடிவு
அறநிலையத் துறை ஊழல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்: அமைச்சர் ரமேஷ் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in