தென்னிந்திய சினிமா

லோகேஷ் கனகராஜ் படத்துக்காக புதிய தோற்றத்தில் அல்லு அர்ஜுன்

செய்திப்பிரிவு

‘புஷ்பா’ மூலம் பான் இந்தியா நடிகராக மாறியிருக்கிறார், அல்லு அர்ஜுன். இப்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சயின்ஸ் பிக்ஷன் படமான இதில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடிக்க இருப்ப தாகக் கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கும் இப்படத்தில் ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றுகின்றனர். இப்படத்தை அடுத்து அல்லு அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இணையும் படத்தைப் பிரபல தெலுங்கு திரைப்பட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் நவீன் யெர்னேனி, ரவி சங்கர் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

பன்னி வாஸ் இணைத் தயாரிப்பு செய்கிறார். நட்டி, சாண்டி, ஸ்வாதி ஆகியோரும் தயாரிப்பு குழுவில் இணைந்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. அல்லு அர்ஜுன் இதில் இதுவரை காணாத முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT