தென்னிந்திய சினிமா

ஒளிப்​ப​தி​வாளரை மணந்​தார் அஹானா கிருஷ்ணா

நிலா

நடிகை அஹானா கிருஷ்ணா - ஒளிப்​ப​தி​வாளர் நிமிஷ் ரவி திருமணம் திரு​வனந்​த​புரத்​தில் நடை​பெற்​றது. ஞான் ஸ்டீவ் லோபஸ், லூக்​கா, பதினெட்​டாம் படி, லோகா சாப்​டர் 1: சந்​திரா உள்பட சில மலை​யாளப் படங்​களில் நடித்​திருப்​பவர் அஹானா கிருஷ்ணா.

இவரும் ஒளிப்​ப​தி​வாளர் நிமிஷ் ரவி​யும் காதலித்து வந்​தனர். கிங் ஆஃப் கோதா, லக்கி பாஸ்​கர், லோகா சாப்​டர் 1: சந்​தி​ரா, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் உள்பட பல படங்​களுக்கு ஒளிப்​ப​திவு செய்துள்ளார் நிமிஷ் ரவி. இவர்​கள் திரு​மணம் திரு​வனந்​த​புரத்​தில் நடைபெற்​றது.

வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில் நடிகர் ரிஷப் ஷெட்​டி, துல்​கர் சல்​மான் உள்பட ஏராள​மான திரையுல​கினர் கலந்​து​கொண்டு மணமக்​களை வாழ்த்​தினர். திரு​மணப் புகைப்​படங்​களைப் பகிர்ந்​துள்ள அஹானா கிருஷ்ணா, நிமிஷ் ரவியைத் தனது 20-வது வயதில் சந்​தித்​த​தாக​வும் 10 வருடங்​கள் காதலித்து 30-வது வயதில் திரு​மணம் செய்து கொண்ட​தாக​வும் பதி​விட்​டுள்​ளார்.

SCROLL FOR NEXT