நடிகை ஸ்வேதா மேனன்

 
தென்னிந்திய சினிமா

“என்னை யாரும் மிரட்ட முடியாது”- நடிகை ஸ்வேதா மேனன் ஆவேசம்

நிலா

மலை​யாளத் திரைப்​படக் கலைஞர்​கள் சங்​க​மான ‘அம்​மா’வுக்கு கடந்த ஆண்டு நடை​பெற்ற தேர்​தலில் வெற்றி பெற்று ஸ்வேதா மேனன் தலை​வ​ரா​னார்.

‘அம்​மா’​வின் வரலாற்​றில் அதன் முதல் பெண் தலை​வ​ராக அவர் பொறுப்​பேற்​றார். இந்​நிலை​யில் கடந்த ஜூன் மாதம் நடை​பெற்ற இச்​சங்​கத்​தின் பொதுக்​குழுக் கூட்​டத்​தில் ஏற்​பட்ட கருத்​து வேறுபாடு காரண​மாக, ஸ்வேதா மேனன் உள்பட 17 நிர்​வாகி​கள், பதவியை ராஜி​னாமா செய்​வ​தாக அறி​வித்​தனர். இதையடுத்து ‘அட்​-ஹாக்’ கமிட்டி அமைக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் ‘அம்​மா’​வின் தலை​வர் பதவி​யில் இருந்து வில​க வில்லை என்று அறி​வித்த ஸ்வேதா மேனன், ‘அட்​-ஹாக்’ கமிட்டிக்கு எதி​ராக வழக்​குத் தொடர்ந்​தார்.

விசா​ரித்த எர்ணாகுளம் முன்​சீஃப் நீதி​மன்​றம் அக்​கமிட்டியின் செயல்பாடுகளுக்கு இடைக்காலத் தடை விதித்​தது. இந்​நிலை​யில், தன்​னு​டைய போராட்​டம் யாருக்கு எதி​ரானது என்று ஸ்வேதா மேனன் விளக்கியுள்​ளார்.

இதுபற்றி அவர் வெளி​யிட்டுள்ள நீண்ட பதி​வில், “ஹேமா கமிட்டி அறிக்​கை​யில் கடுமை​யான குற்​றச்​சாட்​டு​களை எதிர்​கொள்​ளும் அந்த ‘பவர் குரூப்​’-க்கு எதி​ரானது என்​னுடைய போராட்​டம். அவர்கள் என்னை அவம​திக்​க​வும், பதவி​யில் இருந்து அகற்​ற​வும் முயன்​றனர். அவர்​களால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களின் பக்​கத்​தில் எப்போதும் நின்​றிருக்​கிறேன்.

நான் எழுப்​பிய உண்​மை​யான பிரச்​சினை​கள் மறைக்​கப்​பட்​டு, என்​னைப் பற்​றிய பொய்​யான தகவல்​கள் பரப்​பப்​படு​கின்​றன.

ஒரு தேசி​யக் கட்சி (பாஜக), எனக்கு கோடிக்​கணக்​கான ரூபாய் கொடுத்​த​தாகக் கூறப்​படும் குற்​றச்​சாட்​டின் பின்​னணி என்ன என்பதை யாராவது விளக்க முடி​யு​மா? நான் ஏதேனும் அரசி​யல் கட்​சி​யைச் சேர்ந்​தவ​ராக இருந்​தால், அதை ஏன் மறைக்க வேண்டும் ? என்னை தொடர்ந்து அவதூறாகப் பேசுபவர்​களிடம் நான் வைக்​கும் வேண்​டு​கோள், அரசி​யல், மதம், வகுப்​பு​வாதம் போன்​றவற்றை ‘அம்​மா’வுக்​குள் கொண்டு வராதீர்​கள்.

மலை​யாள மக்​கள், சாதி, மதம், அரசி​யல் எல்​லைகளைக் கடந்துதான் கலைஞர்​களை நேசிக்​கின்​றனர். நான் இருக்​கும் வரை ஹேமா கமிட்டி அறிக்​கை​யில் கடுமை​யான குற்றச்சாட்டுகளை எதிர்​கொள்​ளும் யாரும் ‘அம்​மா’​வின் தலைமைப் பொறுப்​புக்கு வர முடி​யாது. அதை உறுதி செய்ய எந்த எல்​லைக்​கும் செல்​லத் தயார். என்னை மிரட்ட முடி​யாது. என்னை அமை​தி​யாக்க முடி​யாது. நான் சரணடைய​வும் பின்​வாங்​க​வும் மாட்​டேன்” என்று தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT