நடிகை சுரேகா வாணி
தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, ஜில்லா, எதிர்நீச்சல், மெர்சல் உள்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருப்பவர், தெலுங்கு நடிகை சுரேகா வாணி.
இவருடைய சில வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோக்களில், சுரேகா தன்னை விட இளவயதுடைய இளைஞருடன் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனால் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சுரேகா வாணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது இன்ஸ்டா கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது. எனது அனுமதியின்றி எனது தனிப்பட்ட மற்றும் அந்தரங்கத் தகவல்கள் கசிந்துள்ளன. மீம் பக்கங்கள், ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் யூடியூப் சேனல்கள் அந்த வீடியோக்களைப் பகிரவோ அல்லது வெளியிடவோ வேண்டாம். மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வியூஸ்க்காக ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சூறையாட வேண்டாம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.