தென்னிந்திய சினிமா

“படங்​களைத் தேர்வு செய்​வதில் தவறு செய்தேன்” - ஸ்ரீலீலா வருத்தம்

நிலா

ராஜ்குமார் பெரியசாமி இயக்​கத்​தில் தனுஷ் நடித்​துள்ள திரைப்​படம் ‘ஓம்’. இதில் மம்​மூட்டி, நஸ்ருதீன் ஷா, இந்​திரன்ஸ், சாய் பல்​லவி, ஸ்ரீலீலா உள்​பட பலர் நடித்​துள்​ளனர். நாளை வெளியாகும் இப்​படத்​தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைத​ரா​பாத்​தில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்​து​கொண்​டனர்.

இதில் நடிகை ஸ்ரீலீலா பேசும்​போது, “எனது திரைப்​பயணம் பற்றி அனைவருக்​கும் தெரியும். இளம் வயதிலேயே திரை​யுல​குக்கு வந்​து​விட்​டேன். அப்​போது எந்​தப் படத்​தைத் தேர்ந்​தெடுக்க வேண்​டும் என்று முடிவு செய்​யும் நிலை​யில் நான் இல்லை. வந்த வாய்ப்​பு​களில் நடித்​துக்​கொண்​டிருந்​தேன். நிதானமாகச் சிந்​தித்தபோது​தான், எங்கே தவறு செய்​தேன் என்​பது புரிந்​தது.

‘ஓம்’ வாய்ப்​புக்​காக இயக்​குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நன்றி. இந்​தப் படத்​தில் பாடல்​கள் இருக்​காது என்​றுதான் அவர் முதலில் கூறினார். அது எனக்​குப் புது​மையாகத் தோன்​றியது. இந்​தப் படத்​தில் நான் முற்​றி​லும் மாறு​பட்ட கதாபாத்​திரத்​தில் நடிக்​கிறேன். எனது புதிய பரிமாணத்தை ரசிப்​பார்​கள் என்று நம்​பு​கிறேன்.

தனுஷ் உடன் நடிக்​கும்​போது, முற்​றி​லும் புதிய உல​குக்கு அழைத்​துச் செல்​கிறார். அவர் படத்​தின் ஒரு பகுதி​யாக இருப்​ப​தும் அவருடன் பணி​யாற்​று​வதும் எனக்​குக் கிடைத்த பேறு. ஒரு நடிக​ராகவும் மனித​ராகவும் அவரிட​மிருந்து நிறைய கற்​றுக்கொண்​டேன்” என்​றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT