தென்னிந்திய சினிமா

ஃபேன்​டஸி கதை​யில் பிரி​யங்கா மோகன்

செய்திப்பிரிவு

நடிகை பிரி​யங்கா மோகன் 1970-களில் நடப்​பது போன்ற ஃபேன்​டஸி கதை​யில் நடிக்​கிறார்.

கன்னட சினி​மா​வில் அறி​முக​மான பிரி​யங்கா மோகன், தமிழில் ‘டாக்​டர்’, ‘டான்’, ‘எதற்​கும் துணிந்​தவன்’, ‘கேப்​டன் மில்​லர்’ ஆகிய படங்​களில் நடித்​துள்​ளார். இவர், இப்​போது கன்​னடத்​தில் மீண்​டும் நடிக்​கிறார்.

‘666 ஆப்​பரேஷன் ட்ரீம் தியேட்​டர்’ என்ற தலைப்​பைக் கொண்ட இப்​படத்தை ஹேமந்த் எம் ராவ் இயக்​கு​கிறார். வைஷக் ஜே பிலிம்ஸ் தயாரிக்​கும் இதில் சிவ ராஜ்கு​மார், டாலி தனஞ்​சயா இணைந்து நடிக்​கின்​றனர். இது, 70-களின் கால​கட்​டத்தை மையப்​படுத்​தி, ரெட்ரோ ஸ்டைல் ஃபேன்​டஸி படமாக உரு​வாகிறது.

இதில் பிரி​யங்கா மோகன் நடிக்​கும் கதா​பாத்​திரத்​தின் முதல் தோற்​றம் வெளி​யாகி​யுள்​ளது. இந்​தப் படத்​தில் முற்​றி​லும் மாறு​பட்ட, வலு​வான கதா​பாத்​திரத்​தில் அவர் நடிக்க இருப்​ப​தாகப் படக்​குழுத் தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT