ஹுமா குரேஷி

 
தென்னிந்திய சினிமா

‘த டாக்​ஸிக்’ வியப்​பில் ஆழ்த்தும்: ஹுமா குரேஷி நம்​பிக்கை

செய்திப்பிரிவு

கீது மோகன்​தாஸ் இயக்​கத்​தில் யாஷ் கதா​நாயக​னாக நடிக்​கும் படம், ‘த டாக்​ஸிக்’. இதில் கியாரா அத்​வானி, நயன்​தா​ரா, ஹூமா குரேஷி என பலர் நடிக்​கின்​றனர்.

கன்​னடம், ஆங்​கில மொழிகளில் உரு​வாகும் இந்​தப் படம் இந்​தி, தெலுங்​கு, தமிழ், மலை​யாளம் உள்​ளிட்ட மொழிகளில் மொழி மாற்​றம் செய்​யப்​பட்டு வெளி​யாக இருக்​கிறது. ஆக்‌ஷனுக்கு முக்​கி​யத்​து​வம் கொடுத்து உரு​வாகும் படம் இது.

சமீபத்​தில் விழா ஒன்​றில் கலந்​து​கொண்ட நடிகை ஹுமா குரேஷி​யிடம் இப்​படம் பற்றி கேட்​ட​போது, “அந்​தப் படம் பற்றி இப்​போது என்​னால் பேச முடி​யாது. அது பெரிய திரைப்​படம். அது பற்றி இப்​போது பேசுவது நியாயமற்​றது. அந்​தப் படத்​துக்​குச் சிறப்​பான அறி​முகம் தேவை என நினைக்​கிறேன்.

தயாரிப்​பாளர்​கள் திட்​ட​மிட்​டுள்ள நேரத்​தில் அதுபற்றி பேசுவேன். என்​றாலும் இந்​தி​யா​வின் மிகப்​பெரிய படமாக ‘த டாக்​ஸிக்’ இருக்​கப் போகிறது. அது பார்​வை​யாளர்​களை நிச்​சய​மாக வியப்​பில் ஆழ்த்​தும். இதை ஒரு ரசிகை​யாகச் சொல்​கிறேன்” என்று தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT