தென்னிந்திய சினிமா

ஹனிரோஸின் ‘ரேச்சல்’ ரிலீஸ் தள்ளி வைப்பு

செய்திப்பிரிவு

ஹனி ரோஸ் தற்போது ‘ரேச்சல்’ என்ற திரைப்படத்​தில் நடித்​திருக்கிறார். ஆனந்​தினி பாலா இயக்​குந​ராக அறி​முக​மாகும் ​இப்படத்​தில், ராதிகா ராதாகிருஷ்ணன், பாபு​ராஜ், சந்து சலீம்​கு​மார், ஜாபர் இடுக்​கி, வினீத் தட்​டில், ரோஷன் பஷீர் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர்.

இதில் ஹனிரோஸ் மாட்​டிறைச்சி வெட்​டு​பவ​ராக நடித்​திருக்​கிறார். மலை​யாளத்​தில் உரு​வாகி​யுள்ள இப்​படம் தமிழ், தெலுங்​கு, கன்​னடம், இந்தி மொழிகளில் டிச.12-ம் தேதி வெளி​யா​வ​தாக இருந்​தது. இந்​நிலை​யில் இதன் வெளி​யீட்​டைப் படக்​குழு தள்ளி வைத்​துள்​ளது.

இதுபற்றி படக்​குழு வெளி​யிட்​டுள்ள செய்​தி​யில், “சரி​யான நேரம் மற்​றும் ஒட்​டுமொத்த ரிலீஸ் சூழலைக் கருத்​தில் கொண்​டு, பார்​வை​யாளர்​களுக்​குச் சிறந்த அனுபவத்தை வழங்​கு​வதை உறு​தி​செய்​வதற்​காக வெளி​யீட்​டுத் தேதியை மாற்றி வைத்​துள்​ளோம்” என்று தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT