தென்னிந்திய சினிமா

“தென்​னிந்​திய இயக்குநரால் கசப்பான அனுபவம்” - நடிகை டெய்சி ஷா வருத்தம்

நிலா

இந்தி நடிகை​யான டெய்சி ஷா, தமிழில் ஜீவா​வின் ‘பொறி’, அருண் விஜய்​யின் ‘மலை மலை’ படங்​களில் ஒரு பாடலுக்கு ஆடி​யுள்​ளார். அவர் அளித்த பேட்​டி​யில் தென்னிந்​திய இயக்​குநர் ஒரு​வ​ரால் தனக்கு கசப்​பான அனுபவம் ஏற்​பட்​ட​தாகத் தெரி​வித்​துள்​ளார்.

இதுபற்றி அவர் கூறும்​போது, ‘‘எனது திரை வாழ்க்​கை​யின் ஆரம்​பக் கட்​டத்​தில் தென்​னிந்​திய இயக்​குநர் ஒரு​வர் நடிகை​யைத் தேர்வு செய்​வதற்​காக மும்பை வந்​திருந்​தார். அவரைச் சந்​திக்க ஆறு முதல் ஏழு பெண்​கள் சென்றிருந்தோம். அவர் ஒவ்​வொரு​வரை​யும் தனித் தனியாகச் சந்​தித்​துப் பேசிக்​கொண்​டிருந்​தார். என்​னிடம் பேசிக் கொண்​டிருந்த அவர், திடீரென என் கையைப் பிடித்துக் கொண்​டது எனக்​குப் பிடிக்​க​வில்​லை.

மற்​றவர்​கள் என்​னைத் தொடு​வது குறித்து எப்​போதும் ஒருவித அச்​சம் உண்​டு. நான் மசாஜ் செய்​து​ கொள்ளாததற்கு காரணமே, மற்​றவர்​கள் என்​னைத் தொடு​வது பிடிக்​காது என்​ப​தால்​தான். அதனால் அந்​தச் சம்​பவம் எனக்கு மனச்​சோர்வை ஏற்​படுத்​தி​யது. நான் அவரிடம், ‘உங்​களை பிறகு தொடர்பு கொள்​கிறேன்’ என்று கூறி​விட்டு வந்​து​விட்​டேன்.

பிறகு அவரை ஒரு​போதும் தொடர்​பு​கொள்​ளவே இல்​லை” என்​றார். அவரிடம் அந்த இயக்​குநரின் பெயரைக் கேட்​ட​போது அதை சொல்ல மறுத்​து​விட்​டார்.

SCROLL FOR NEXT