தென்னிந்திய சினிமா

‘அனோமி’​யில் தடய​வியல் நிபுணராக பாவனா

செய்திப்பிரிவு

நடிகை பாவ​னா, நீண்ட இடைவெளிக்​குப் பிறகு மலை​யாளத்​தில் நடித்​துள்ள படம், ‘அனோமி’. ரியாஸ் மரத் இயக்​கி​யுள்ள இப்படத்தில் ரஹ்​மானுக்கு ஜோடி​யாக அவர் நடித்​துள்​ளார்.

இதில் பினு பப்​பு, விஷ்ணு அகஸ்த்​யா, அர்​ஜுன் லால், ஷெபின் பென்​சன் மற்​றும் த்ரிஷ்யா ரகு​நாத் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். ஹர்​ஷவர்​தன் ரமேஷ்வர் இசை அமைத்​துள்ள இப்​படத்​துக்கு சுஜித் சரங் ஒளிப்​ப​திவு செய்துள்ளார்.

          

பிப்.6ம் தேதி வெளி​யாகிறது. இதில் வழக்​க​மான குற்​ற​வியல் த்ரில்​லர் எல்​லைகளைத் தாண்​டி, பேரலல் புல​னாய்வு எனும் தனித்​து​வ​மான கதை சொல்​லும் முறை​யில், உணர்ச்​சிகளும் பதற்​ற​மும் கலந்த திரைக்​கதையை இயக்​குநர் அமைத்துள்​ளார்.

இதில் பாவ​னா, ‘சா​ரா’ என்ற கதா​பாத்​திரத்​தில் தடய​வியல் நிபுண​ராக நடித்​துள்​ளார். ரஹ்​மான், விசா​ரணை அதி​காரி​யாக நடிக்கிறார். இதன் டிரெய்​லர் நேற்று வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

மஞ்சு வாரியர், நஸ்​ரி​யா, கல்​யாணி பிரியதர்​ஷன், பார்​வதி திரு​வோத்​து, பிரி​யாமணி, விஜய் சேதுபதி, துல்கர் சல்மான் உள்ளிட்டோர் டிரெய்லரை வெளி​யிட்​டனர். அது வரவேற்பை பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT