தென்னிந்திய சினிமா

“சினிமா​வில் இருந்து வில​கும் முடிவில் இருந்தேன்” - நடிகை அனுபமா பரமேஸ்வரன் தகவல்

நிலா

நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது வாழ்​வில் 2 ஆண்​டு​கள் ‘நார்​சிஸ்​டிக்’ (ஒரு​வரை தன் கட்​டுப்​பாட்​டில் முழு​மை​யாக வைத்திருப்​பது) துன்​புறுத்​தலால் பாதிக்​கப்​பட்​டிருந்​தேன் என சில மாதங்​களுக்கு முன் தெரி​வித்​திருந்​தது பரபரப்பை ஏற்​படுத்தி இருந்​தது. இந்​நிலை​யில் அந்த துன்​புறுத்​தல் காரண​மாக, சினிமாவில் இருந்து விலக நினைத்​த​தாகத் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் அளித்​துள்ள பேட்​டி​யில், “அந்​தக் கடுமை​யான கால​கட்​டத்​தில் கண்​ணாடியைப் பார்த்​தால், அதில் என் முகத்தைப் பார்க்க முடி​யாது. வேறு ஏதோ ஒன்​றைப் பார்ப்​பது போல இருக்​கும். ஒப்​பனை செய்​து​கொண்டு என் முகத்​தைப் பார்த்தாலும் அதில் நான் இல்​லை.

ஒவ்​வொரு நாளும் உயிர் பிழைத்​திருப்​ப​தற்​கான போராட்​ட​மாக உணர்ந்​தேன். ஒவ்​வொரு நாளும் அந்த நாளை எப்​படி​யா​வது கடந்து செல்​வது​தான் ஒரே நோக்​க​மாக இருந்​தது. ஒரு நாள் முடிந்ததும், ‘கட​வுளே, இன்​றைய நாளை எப்​படியோ கடந்து வந்​து​விட்​டேன்’ என்று நிம்​ம​திப் பெரு​மூச்சு விடு​வேன். மறு​நாள் தூங்​கச் செல்​லும்​போது, நாளை என்ன பயங்​கர​மான சம்​பவம் நடக்​கப் போகிறதோ என்ற அச்​சம் மீண்​டும் எழும். அப்​போது, வாழ்க்கையை வாழ்​வதே என்னை சோர்​வடையச் செய்​தது.

அந்​தக் கடின​மான கால​கட்​டத்​தில் தொடர்ந்து படப்​பிடிப்புகளுக்குச் சென்​றாலும், மனதள​வில் முழு​மை​யான ஈடுபாட்டுடன் நடிக்க முடிய​வில்​லை. அந்​தக் காலக்​கட்​டத்​தில் நான் நடித்த படங்​களை இப்​போது நடிக்க வேண்​டி​யிருந்​தால் 50 சதவி​கிதம் இன்​னும் சிறப்​பாக நடித்​திருப்​பேன். அப்​போதும் நடிப்பை நான் முழு​மை​யாகக் கைவிட​வில்​லை. உண்​மை​யில், அந்த முடிவை எடுக்​கும் நிலைக்கு மிக அரு​கில் சென்​று​விட்​டேன். அந்த முடிவை எடுக்​காததற்​காக என்னை நானே பாராட்​டிக்​கொள்​கிறேன்” என்று தெரி​வித்​துள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT