நடிகை ஆலியா பட்
‘கே.ஜி.எஃப்’, ‘கே.ஜி.எஃப்-2’, ‘சலார்’ படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், அடுத்து இயக்கி வரும் திரைப்படம், ‘டிராகன்’. இதில் ஜூனியர் என்டிஆர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
அவர் ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் இந்தி நடிகர் அனில் கபூர் இணைந்திருந்தார். அவர் முக்கிய வேடத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது.
இதற்கிடையே பிரபல பாலிவுட் நடிகர்களான ஷாகித் கபூர், ஆலியாபட் ஆகியோரும் இதில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆர்ஆர்ஆர் படத்தில் ஜுனியர் என்டிஆருடன் ஆலியா பட் ஏற்கெனவே நடித்திருந்தார்.