ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘ஓ...!சுகுமாரி’ படத்தில் வீர் ஹீரோவாக நடிக்கிறார்.
இதில் ஜான்சி, விஷ்ணு ஓ லட்டு , ஆமணி, முரளிதர் , ஆனந்த், அஞ்சிமாமா, சிவானந்த், கோட்டா ஜெயராம், கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் உள்பட பலர் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் இயக்கும் இப்படத்தை கங்கா என்டர்டெயின் மென்ட் சார்பில் மஹேஸ்வர் ரெட்டி மூலி தயாரிக்கிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அவர் தாமினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்துக்கு சி.ஹெச்.குஷேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். பரத் மஞ்சிராஜு இசை அமைக்கிறார்.