தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி தமிழில் லிங்குசாமி இயக்கிய ‘த வாரியர்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இவர் இப்போது இயக்குநராக அறிமுகமாகிறார். ராமின் 23 வது படத்தை அவரே இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அவர் வீரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப் பட்டுள்ள அவரது கதாபாத்திரத் தோற்றம் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கிறது. சைக்காலஜிக்கல் ஆக் ஷன் த்ரில்லர் படமான இதை கிருஷ்ணா பொத்தினேனி தயாரிக்கிறார். ஜூன் மாதம் படப்பிடிப்பைத் தொடங்கி, டிசம்பரில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.