கொச்சி: நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி (90) உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானார்.
அவர் காலமானபோது நடிகர் மோகன்லால் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் மம்மூட்டி உள்ளிட்ட அவரது நெருங்கிய நண்பர்களும், திரையுலகை சேர்ந்த பலரும் அவரது வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். மோகன்லாலின் தந்தையும், கேரள அரசின் முன்னாள் உயரதிகாரியுமான விஸ்வநாதன் நாயர் பல ஆண்டுகளுக்கு முன் காலமானார்.
சாந்தகுமாரி மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.