தென்னிந்திய சினிமா

“நான் எங்கேயும் சென்றுவிடவில்லை” - ‘லைகர்’ தோல்விக்கு பிறகு பொதுவெளியில் விஜய் தேவரகொண்டா

செய்திப்பிரிவு

'நான் எங்கேயும் சென்றுவிடவில்லை. இங்கேயேதான் இருக்கிறேன்' என நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். ‘லைகர்’ தோல்விக்குப் பிறகு தற்போது அவர் பொதுவெளியில் பேசியுள்ளார்.

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்தில் வெளியான 'லைகர்' திரைப்படம் கடும் நஷ்டத்தை சந்தித்தது. தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து 'போராடினால் ஒரு பைசா கூட தரமாட்டேன்' என கூறிவிட்டு தன்னை விநியோகஸ்தர்கள் மிரட்டுவதாகவும் அதன் இயக்குநரும் தயாரிப்பாளருமான பூரி ஜெகந்நாத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 'லைகர்’ படத்தில் தோல்விக்குப் பிறகு நீண்ட நாள்களாக பொதுவெளியில் கலந்து கொள்ளாமலிருந்து வந்த நடிகர் விஜய் தேவரகொண்டா நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போதுப பேசிய அவர், “நான் எங்கு சென்றாலும், ரசிகர்கள், அண்ணா, நீங்கள் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நான் எங்கேயும் சென்றுவிடவில்லை என்பதை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்'' என்றார். அவர் பேசும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அவரது ரசிகர் ஒருவர், “வாழ்க்கையில் விஜய் தேவரகொண்டாவைப் போலவே தனக்கும் நம்பிக்கை இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT