பொங்கல் பண்டிகைக்கு மெகா பட்ஜெட்டில் உருவாகியுள்ள நான்கு திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.
அனில் ரவிப்புடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள படம் `மன சங்கர வரப்பிரசாத் காரு'. இதில் நயன்தாரா அவர் ஜோடியாக நடித்துள்ளார். வெங்கடேஷ் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். கேத்தரின் தெரசா, விடிவி கணேஷ் உள்பட பலர் நடிக்கும் இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாகக் கூறப்பட்டது.
ஆனால், அப்போது வெளியாகாது என்று செய்தி பரவியதை அடுத்து நடிகர் சிரஞ்சீவி, ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி ஜன.12-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.
பொங்கலை முன்னிட்டு விஜய்யின் ‘ஜனநாயகன்’ ஜன.9-ம் தேதி வெளியாக இருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’, ஜன.14-ம் தேதி வெளியாகிறது.
பிரபாஸ் நடித்துள்ள ‘த ராஜா சாப்’படமும் பொங்கல் ரேஸில் இருக்கிறது. அந்தப் படம் ஜன.9-ம் தேதி ஜனநாயகனுடன் மோதுகிறது.
இதில் ‘ஜனநாயகன்’, ‘பராசக்தி’ ஆகிய தமிழ்ப் படங்கள், ‘த ராஜா சாப்’, ‘மன சங்கர வரப்பிரசாத் காரு' ஆகிய தெலுங்குத் திரைப்படங்கள் பான் இந்தியா படங்களாக வெளியாக இருக்கின்றன. மேலும் சில சிறுபட்ஜெட் படங்களும் வெளியாக வாய்ப்பிருக்கின்றன.