‘பனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கும் 2-வது படம் ‘பரிபாடி’. இதில் அபிநயா, சாகர் சூர்யா, சாந்தினி ஸ்ரீதரன், அபயா ஹிரண்மயி, சைஜு குரூப் உள்பட பலர் நடித்துள்ளனர். காவ்யா ஃபிலிம் சார்பில் வேணு குன்னப்பள்ளி தயாரிக்கும் இப்படம், பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாகியுள்ளது.
ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் மூலம் அவர் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.
“சாளக்குடியில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்துக்காக சுமார் 100 புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். அவர்களுக்கு 4 மாதம் சிறப்பு பயிற்சி அளித்து நடிக்க வைத்துள்ளனர். தற்போது போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நடந்து வருகின்றன. டிசம்பரில் படம் வெளியாகும்” என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.