தமிழில், துப்பாக்கி, அஞ்சான், மதராஸி ஆகிய படங்களில் நடித்திருப்பவர், இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால். இந்தியில் கதாநாயகனாக நடித்து வரும் அவர், இப்போது, ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ என்ற ஹாலிவுட் ஆக் ஷன் படத்தில் தால்சிம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அவருடன் ஆண்ட்ரு கோஜி, நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ என்ற பெயரிலான பிரபல மான வீடியோ கேம் தொடரை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வித்யுத் ஜம்வாலின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டுள்ளது. இப்படத்துக்காக மொட்டை அடித்துள்ள அவர், வித்தியாசமான தோற்றத்துக்கு மாறியிருக்கிறார். இத்தோற்றம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இணையத்தில் வித்யுத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.