சன்னி லியோன்

 
ஹாலிவுட்

ஹாலிவுட் வெப் தொடரில் சன்னி லியோன்

நிலா

இந்தி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள சன்னி லியோன், இப்போது ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

‘த ஜெயன்ட்’ என்ற அந்த வெப் தொடரை கெவின் பி பிளாத் எழுதி இயக்குகிறார். இதில் சன்னி லியோன் சட்ட அமலாக்க அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இத்தொடரில் நடிப்பது பற்றி சன்னி லியோன் கூறும்போது, “நான் இதற்கு முன்பு நடித்ததில் இருந்து இது மாறுபட்ட ஒன்று. அதுதான் இதை ஏற்க வைத்தது.

புதிய கதாபாத்திரத்தை ஆராய்வதும், முற்றிலும் புதிய களத்துக்குள் நுழைவதும் எனக்கு சிலிர்ப்பான அனுபவம். இந்த தொடரின் படப்பிடிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இதில் பணியாற்றுவதை எவ்வளவு ரசிக்கிறேனோ, அதே அளவு எனது ரசிகர்களும் இத்தொடரை ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

          
SCROLL FOR NEXT