ஹாலிவுட்

புதிய ஜேம்ஸ்​ பாண்ட் ஆனார் ராபர்ட் பேட்டின்சன்!

நிலா

புதிய ஜேம்ஸ் பாண்ட் நடிக​ராக ராபர்ட் பேட்டின்சன் தேர்வாகியுள்​ள​தாகப் படக்​குழு அதி​காரப்​பூர்​வ​மாக அறிவித்துள்ளது.

ஹாலிவுட் திரைப்​படங்​களில் மிகவும் விரும்​பப்​படும் கேரக்​டராக இருப்​பது ஜேம்​ஸ்​பாண்ட். உல​கம் முழு​வதும் இந்த 007 கதாபாத்​திரத்​துக்கு ஏராளமான ரசிகர்​கள் உள்​ளனர். இது​வரை சீன் கானரி, ஜார்ஜ் லேசன்பி, ரோஜர் மூர், டிமோதி டால்​டன், பியர்ஸ் ப்​ராஸ்​னன், டேனியல் கிரேக் ஆகியோர் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர்.

டேனியல் கிரேக், தொடர்ந்து 5 ஜேம்​ஸ்​ பாண்ட் படங்​களில் நடித்​தார். பாண்ட் பட வரிசையின் 25-வது பட​மான ‘நோ டைம் டு டை’, கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது.

இதற்​குப் பிறகு, பாண்ட் கேரக்​டரில் நடிக்​கப் போவதில்லை என்று டேனியல் கிரேக் அறி​வித்​து​விட்​டார். இத​னால் அடுத்த ஜேம்​ஸ் பாண்ட் கதாபாத்​திரத்​தில் நடிக்க இட்​ரிஸ் எல்பா, டாம் ஹாலண்ட், ஜோஷ் ஓ’கானர், ஜேக்​கப் எலார், கேலம் டர்​னர் ஆகியோர் பரிசீலனை​யில் இருந்​த​தாகக் கூறப்​பட்​டது. இந்​நிலை​யில் புதிய பாண்ட் நடிக​ராக, 40 வய​தான ராபர்ட் பேட்​டின்​சன் அறி​விக்​கப்​பட்​டுள்​ளார்.

இந்​தப் புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தை டெனிஸ் வில்​லென்​யூவ் இயக்​கு​கிறார். ஸ்டீவன் நைட் திரைக்​கதை எழுதும் இப்​படத்தை, ஏமி பாஸ்​கல் மற்​றும் டேவிட் ஹேமன் ஆகியோர் தயாரிக்​கின்​றனர். சினிமாவின் மிகவும் அங்​கீகரிக்​கப்​பட்ட பாத்​திரங்​களில் ஒன்றை ஏற்​பது பற்றி பேட்​டின்​சன் கூறும்​போது, ‘‘மிகவும் புகழ்​பெற்ற பெயர் ஜேம்​ஸ்​பாண்ட். 007 பாத்​திரம் எனக்கு வழங்கப்பட்டிருப்​பது வாழ்​நாள் பெருமை. இக்​கதாபாத்​திரம் எனக்​குக் கிடைத்​த தன் மூலம் கனவு நனவானது. இந்த அற்புதமான குழு​வுடன் இணைந்து பணி​யாற்​று​வதில் மிகுந்த உற்சாகத்​துடன் இருக்​கிறேன்” என்று தெரி​வித்​துள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT