ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. 98-வது விருது விழா சமீபத்தில் நிறைவடைந்தது.
அடுத்த இரண்டு வருடங்களுக்கும் இதே இடத்தில் இவ்விழா நடைபெற இருக்கிறது. 100-வது விழாவுக்குப் பிறகு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பீகாக் திரையரங்குக்கு ஆஸ்கர் விருது வழங்கும் விழா மாற்றப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2029ம் ஆண்டு நடக்கும் விழா, இந்த புதிய அரங்கில் நடக்கும். இந்த ‘எல்ஏ லைவ்’ வளாகம், நவீன வசதிகள் கொண்ட ‘என்டர்டெயின்மென்ட் ஹப்’ என்பதால், விழாவின் தரமும் தொழில் நுட்பமும் இன்னும் மேம்படும் என கூறப்படுகிறது.
அமெரிக்காவில் பெரிய நெட்வொர்க் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வந்த ஆஸ்கர் விருது விழா இனி, யூடியூப் வழியாக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு நேரடியாகவும், எளிதாகவும் சென்றடையும் வகையில் ஒளிபரப்பாக இருக்கிறது.