ஹாலிவுட்

எம் (1931): அத்தனை சினிமா பாணிகளுக்கும் ஆதி புள்​ளி! | ஹாலிவுட் மேட்னி 36

ராம்குமார் சுப்பாராமன்

சட்​டத்​தின் கையில் சிக்​காத, குழந்​தைகளைக் கொல்​லும் கொலை​யாளியை, சட்​டத்​துக்​குப் புறம்​பான உலகமே நீதி​மன்​றத்​தில் நிறுத்​தும் உளவியல் த்ரில்​லர் திரைப்​படம் ‘எம்’ (M 1931) ஒரு இருண்ட முற்​றத்​தில் சிறுமிகள் வட்​ட​மாக நின்​று, “இருட்​டிலிருந்து கருப்பு மனிதன் வரு​வான்​... தன் சிறிய கோடாரி​யால் உன்னை வெட்​டு​வான்​...” எனப் பாடி விளை​யாடுகிறார்​கள். அந்​தப் பாட்​டைக் கேட்டு பதறும் ஒரு தாய், “அதை நிறுத்​துங்​கள்!” என்று கத்​துகிறாள்.

பள்​ளிக்​குச் சென்ற தன் மகள் எல்ஸி வீடு திரும்​பு​வாள் என்று அந்​தத் தாய் காத்​திருக்​கிறார். பள்ளி முடிந்து வரும் எல்ஸி வழி​யில் பந்​தைத் தட்டி விளை​யாடு​கிறாள். அந்​தப் பந்​து, சுவரில் ஒட்​டப்பட்​டிருக்​கும் “குழந்​தைக் கொலை​யாளியைக் கண்​டு​பிடிப்ப வருக்கு 10 ஆயிரம் மார்க்ஸ் பரிசு” என்ற போஸ்​டரில் பட்​டுத் தெறிக்​கிறது. அதன் மீதே, மனப்​பிறழ்வு கொண்ட குற்​ற​வாளி ஹான்ஸ் பெக்​கர்ட்​டின் நிழல் விழுகிறது. அவன் எல்​ஸி​யிடம் நைசாகப் பேசி, பலூன் வாங்​கிக் கொடுத்​துக் கடத்​துகிறான்.

எல்ஸி காணா​மல் போன செய்தி நகரெங்​கும் பதற்​றத்தை ஏற்​படுத்​துகிறது. இதற்​கிடை​யில், “கொலைகளைத் தொடரு​வேன்” என்று பெக்​கர்ட் செய்​தித்​தாள்​களுக்​குப் பெயரில்லா கடிதம் அனுப்​பு​கிறான். காவல்​துறை கைரேகை மற்​றும் கையெழுத்து ஆய்வு முறை​களின் உதவி​யுடன் தடயங்​களைத் தேடு​கிறது.

விடு​தி​கள், ரயில் நிலை​யங்​களில் அதிரடிச் சோதனை​கள் நடக்​கின்​றன. ஆவணங்​கள் இல்​லாதவர்​கள் சிறை​யிலடைக்​கப்படு​கிறார்​கள். போலீ​ஸாரின் இந்​தத் தொடர் விசா​ரணை​களால் நிழலுல​கக் குற்​ற​வாளி​கள் அவதிப்​படு​கிறார்​கள்.

‘எவனோ ஒரு மனநோ​யாளி யால் ஒட்​டுமொத்த நிழல் உலக​மும் முடங்​கு​கிறது’ எனத் தாதாக்​கள் கூடி, ‘அவனை நாமே பிடிப்​பது’ என முடி​வெடுக்​கிறார் கள். நகரின் மூலை முடுக்​கு​களைக் கண்​காணிக்க ‘பிச்​சைக்​காரர்​கள் சங்​கத்​தை’ உளவுப் பணி​யில் இறக்​கு​கிறார்​கள். ஒவ்​வொரு பிச்​சைக்​காரருக்​கும் ஒரு குறிப்​பிட்ட தெரு ஒதுக்​கப்​படு​கிறது.

ஒரு​நாள், அந்​தக் கொலை​யாளி மற்​றொரு சிறுமிக்கு பலூன் வாங்​கிக் கொடுத்​த​படி, ஒரு சிம்​பொனி இசையை விசிலடித்​துப் பாடு​கிறான். பலூன் விற்​றுக்​கொண்​டிருக்​கும் பார்​வையற்​றவர், எல்ஸி காணா​மல் போன நாளி​லும் இதே விசில் சத்​தத்​தைக் கேட்​டதை நினை​வு​கூர்ந்து தன் நண்​பனுக்​குச் சிக்​னல் கொடுக்கிறார்.

அந்த நண்​பன் சாக்​பீஸால் தன் கையில் ‘M’ (Murderer) என்று எழு​திக்​கொண்​டு, கொலை​யாளி​யின் முதுகில் மோதி, “பழத்​தோலைக் கீழே போடாதே” என்று எச்​சரிப்​பது போல அந்த முத்​திரையைப் பதிக்​கிறான்.

முதுகில் ‘M’ இருப்​பவனைப் பின் தொடருங்​கள் என உஷா​ராகும் பிச்​சைக்​காரர்​கள், அவனுக்​குத் தெரி​யாமல் ஒரு​வரிட​மிருந்து மற்​றொரு​வருக்​குத் தகவல் பரி​மாறியபடி நிழல்​போல் பின்​தொடர்​கிறார்​கள். கண்​ணாடி​யில் தன் முதுகில் ‘M’ இருப்​ப​தைப்​பார்த்து அதிர்ச்​சி​யடை​யும் கொலை​யாளி, தப்​பிக்க ஒரு பெரிய கூட்​டுறவு அலு​வல​கக் கட்​டிடத்​துக்​குள் புகுந்​து​கொள்​கிறான்.

தாதாக்​கள் அந்​தக் கட்​டிடத்தை முற்​றுகை​யிட்​டு, தேடு​கிறார்​கள். போலீஸ் வரு​வதற்​குள் தாதாக்​களிடம் கொலை​யாளி மாட்​டிக்​கொள்​கிறான். கைவிடப்​பட்ட தொழிற்​சாலை​யின் அடித்​தளத்​தில், நூற்​றுக்கணக்​கான குற்​ற​வாளி​களுக்கு நடுவே கொலை​யாளி நிறுத்​தப்​பட்டு ரகசிய நீதி​மன்​றம் நடத்​தப்​படு​கிறது.

அவனுக்​காக ஆஜராகும் வழக்​கறிஞர், “இவன் ஒரு மனநோ​யாளி. இவனை மருத்​து​வ​மனைக்​குத்​தான் அனுப்ப வேண்​டும்” என்​கிறார். அதற்கு தாதாக்​கள், “இறந்த குழந்​தைகளுக்​காக யார் நீதி வழங்​கப் போகிறார்கள்? மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​னால், சில வருடங்​களில் வெளியே வந்து மீண்​டும் இதே கொடூரத்​தைச் செய்​வான். கொல்​வதே தீர்​வு!” என்​கிறார்​கள். தாதாக்​கள் அவனைக் கொல்​லப் பாயும் தருணத்​தில் போலீஸ் நுழைந்து அனை​வரை​யும் சிறைபிடிக்​கிறது.

நீதி​மன்​றத்​தில், மனநோ​யாளி பெக்​கர்ட்​டால் கொல்​லப்​பட்ட குழந்​தைகளின் தாய்​மார்​கள் கண்​ணீர் மல்க அமர்ந்​திருக்​கிறார்​கள். அப்​போது எல்​ஸி​யின் தாய், “எந்​தத் தண்​டனை​யும் இறந்த குழந்​தைகளை மீண்​டும் உயிர்ப்​பிக்க முடி​யாது. குழந்​தைகளை நீங்​கள் எல்​லோரும் கவன​மாகக் காக்க வேண்​டும் ” என்று திரையைப் பார்த்​துக் கூறுகிறாள்.

சமூகத்​தின் ஒட்​டுமொத்​தப் பொறுப்​பின்​மை​யைப் பற்​றிய எச்​சரிக்கை மணி அடிப்​ப​தாக இப்​படம் முடிகிறது. 1931-ல் வெளிவந்த ‘M’ வெறும் ஒரு குழந்​தைக் கொலை​யாளி பற்​றிய படம் மட்​டுமல்ல; பின்​னாளில் ஹாலிவுட்​டைக் கலக்​கிய சீரியல் கில்​லர், சைக்​கலாஜிக்​கல் த்ரில்​லர், ஃபிலிம் நாய்ர் மற்​றும் போலீஸ் இன்​வெஸ்​டிகேஷன் போன்ற அத்​தனை சினிமா பாணி​களுக்​கும் ஆதிப் புள்​ளி! நாஜிக்​களின் அரசி​யல் நெருக்​கடிக்கு அஞ்சி ஜெர்​மனியை விட்டு வெளி​யேறி ஹாலிவுட்​டுக்​குப் புலம்​பெயர்ந்த ஃபிரிட்ஸ் லாங், இருப​தாண்​டு​களுக்​கும் மேலாகப் பல கிளாசிக் க்ரைம் படங்​களை இயக்​கி, அமெரிக்க சினி​மா​வின் போக்​கையே மாற்றி எழு​தி​னார்.

நீரோ ஃபிலிம் என்ற சுயாதீன நிறு​வனம் மூலம் சீமோர் நெபென்​சல் தயாரித்த இப்​படத்​துக்கு ஃப்​ரிட்ஸ் லாங்​கும், அவரது மனைவி தியா வான் ஹார்​போ​வும் இணைந்து திரைக்​கதை எழு​தினர்.

வன்​முறையைக் காட்​டா​மல், தனியே கிடக்​கும் பந்​து, மின்​கம்​பி​யில் மாட்​டிய பலூன் போன்ற குறி​யீடு​கள் மூலமே மரணத்​தின் கோர வலியைக் கடத்​து​வது ஃபிரிட்ஸ் லாங்​கின் ஆகச்​சிறந்த திரை மொழி! ஒளிப்​ப​தி​வாளர் ஃபிரிட்ஸ் ஆர்னோ வாக்​னர் ‘ஜெர்​மன் எக்​ஸ்​பிரஷனிசம்’ பாணி​யில் ஒளியை​யும் நிழலை​யும் கையாண்ட விதம் அற்​புதம். கொலை​யாளி​யின் நீண்ட இருண்ட நிழலே மரணத்​தின் குறி​யீ​டாக மாறும் உத்​தி​யும், கேமரா கோணங்​கள் மூலம் பெர்​லின் நகரின் பயத்தை இருண்ட தன்​மையோடு கடத்​தி​யதும் அற்​புதம்.

எடிட்​டர் பால் ஃபால்​கன்​பெர்க் ‘பேரலல் எடிட்​டிங்’ முறையை இதில் மிக நேர்த்​தி​யாகப் பயன்​படுத்​தி​யிருக்​கிறார். ஒரு​புறம் போலீஸ் அதி​காரி​களின் கூட்​டத்​தை​யும், மறு​புறம் தாதாக்​களின் ரகசி​யத் திட்​டத்​தை​யும் மாற்றி மாற்றி வெட்டி (Cross-cutting), திரைக்​கதை​யின் வேகத்​தைக் கூட்​டி​யிருக்​கிறார்.

இயக்​குநரின் முதல் பேசும் படமான இதில், தேவையற்ற பின்​னணி இசை இல்​லை. கொலை​யாளி வாயால் எழுப்​பும் அந்த விசில் சத்​தம் மட்​டுமே படத்​தின் அச்​சுறுத்​தும் அடை​யாளம். ஒரு கதா​பாத்​திரத்தை அடை​யாளப்​படுத்த ஒலியைப் பயன்​படுத்​திய ஆரம்​ப​கால திரைப்​படங்​களில் ‘M’ முக்​கிய​மான இடத்​தைப் பெறுகிறது.

கொலை​யாளி​யாக நடித்த பீட்​டர் லோர் பயம், குற்​றவுணர்​வு, மனப்​பிறழ்வு ஆகிய அனைத்​தை​யும் தன் முக​பாவனை​களால் அற்​புத​மாக வெளிப்​படுத்​துகிறார். குறிப்​பாக இறு​தி​யில் அவர் பேசும் நீதி​மன்ற உரை​யில், “நீங்​கள் விருப்​பப்​பட்டு குற்​றம் செய்​கிறீர்​கள்; ஆனால் எனக்​குள் இருக்​கும் அந்த இருண்ட குரல்​களிட​மிருந்து என்​னால் தப்ப முடிய​வில்​லை!” என்று பெக்​கர்ட் கதறும்​போது, ஒரு கொலை​யாளி மீதும் பார்​வை​யாளர்​களுக்கு ஒரு கணப் பரி​தாபம் எட்​டிப்​பார்க்​கிறது.

இது உலக சினி​மா​வின் சிறந்த தனி​மொழிகளில் ஒன்​று. 1931-ல் பெர்​லின் நகரின் பின்​னணி​யில் பிரிட்ஸ் லாங் எழுப்​பிய அந்த எச்​சரிக்​கைக் குரல், நூற்​றாண்​டைக் கடக்​கும் இந்த 2026-ம் ஆண்​டிலும் அப்​படியே ஒலிக்​கிறது.

குற்​ற​வாளி​களைத் தண்​டிப்​பது ஒரு​புறம் இருந்​தா​லும், நம் வீட்​டுச் சிறு குழந்​தைகளைப் பெற்​றோர்​களாகிய நாம்​தான் பாது​காப்​போடும் எச்​சரிக்​கையோடும் வளர்க்க வேண்​டும் என்ற ‘எம்’ படத்​தின் இறு​திச் செய்​தி, இன்​றள​வும் நாம் கவனத்​தில் கொள்ள வேண்​டிய அவசி​ய​மான சமூக நீதி​யாகும்!

குற்​ற​வாளியை வேட்​டை​யாடும் கதையைச் சொல்​லிக்​கொண்​டே, நீதி, மனநோய், சமூகப் பொறுப்பு ஆகிய​வற்​றைப் பற்​றிய ஆழமான கேள்வி​களை எழுப்​பும்​ உலக சினி​மா​வின்​ அழி​யாத மைல்​கற்​களில்​ ஒன்​றான ‘எம்​’மைப்​ பாரபட்​சமின்​றி அனைத்​து தரப்​பினரும்​ பார்க்​கலாம்​.

(செவ்​வாய்​தோறும்​ படம்​ ​பார்​ப்​போம்)

- ramkumaraundipatty@gmail.com

SCROLL FOR NEXT