ஹாலிவுட்

சினி​மா​வில் ஏஐ பயன்பாட்டுக்கு ‘த லார்டு ஆப் த ரிங்​ஸ்’ இயக்குநர் ஆதரவு

நிலா

திரைப்​படங்​களில் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்​படுத்​து​வ​தில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று பிரபல ஹாலிவுட் இயக்​குநர் பீட்டர் ஜாக்சன் தெரி​வித்​துள்​ளார். ‘த லார்டு ஆப் த ரிங்​ஸ்’, ‘த ஹாபிட்’ வரிசை படங்​கள், ‘ஹெவன்லி கிரியேச்​சர்​ஸ்’, ‘கிங்​காங்’ உள்பட பல படங்​களை இயக்​கிய​வர் பீட்​டர் ஜாக்​சன்.

தயாரிப்​பாள​ரு​மான இவருக்​கு, கேன்ஸ் திரைப்பட விழா​வில் கவுரவ தங்​கப்​பனை விருது வழங்​கப்​பட்​டது. இதைப் பெற்ற அவர் ‘மாஸ்​டர் கிளாஸ்’ நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றார். திரைப்​படத் துறை​யில் ஏஐ பயன்​பாடு அதி​கரித்து வரு​வது குறித்​து, விவாதங்​கள் நடை​பெற்று வரும் நிலை​யில் இதுபற்றி அவரிடம் கேட்​ட​போது, “திரைப்​படங்​களில் ஏஐ பயன்​படுத்​து​வதைப் பிடிக்​க​வில்லை என்று சொல்​லி​விட முடி​யாது. அது மற்​றொரு ‘ஸ்​பெஷல் எபெக்ட்’ மட்​டுமே.

ஆனால், நடிகர்​களின் முக அடை​யாளம் மற்​றும் தோற்​றம் அவர்​களின் அனு​ம​தி​யுடன் மட்​டுமே பயன்​படுத்​தப்பட வேண்​டும். நடிகர்​களின் உரிமை​கள் தவறாகப் பயன்​படுத்​தப்படா​மல் பாது​காக்​கப்பட வேண்​டும். தற்​போதைய சூழலில் எல்​லோரும் ஏஐ குறித்து மிக​வும் கவலைப்​படு​வ​தால் கணினி மூலம் உரு​வாக்​கப்​பட்ட கதா​பாத்​திரங்​களுக்கு விருதுகள் கிடைக்​கும் வாய்ப்பு இல்லை” என்று பீட்​டர் ஜாக்​சன் தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT