நடிகர் சர் சாம் நீல்
‘ஜுராசிக் பார்க்’ படத்தில் டாக்டர் ஆலன் கிராண்ட் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்ற சர் சாம் நீல் காலமானார். அவருக்கு வயது 78.
நியூசிலாந்தைச் சேர்ந்த இவர், ‘தி பியானோ’, ‘த ஹண்ட் ஃபார் ரெட் அக்டோபர்’, ‘பீக்கி பிளைண்டர்ஸ்’, ‘த ஜங்கிள் புக்’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். அரிய வகை ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைக்குப் பிறகு அதிலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார். இந்நிலையில் அவர் திடீரென காலமாகிவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
“இந்த இழப்பு எதிர்பாராத விதமாக ஏற்பட்டது. ஆனால், புற்று நோயில் இருந்து முழுமையாக அவர் குணமடைந்த நிலையிலேயே உயிரிழந்தார் என்பது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது” என்று அவர் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.