ஹாலிவுட்

ஹாலிவுட்டுக்கு மீண்டும் திரும்பிய ஜானி டெப்

நிலா

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் மீது அவரது முன்​னாள் மனைவி ஆம்​பர் ஹெட் தொடர்ந்த குடும்ப வன்​முறை வழக்​கால் அவரது ஹாலிவுட் திரைப்​பயணம் பாதிக்​கப்​பட்​டது. கடந்த 8 ஆண்​டு​களாக ஹாலிவுட் படங்​களில் நடிக்​காத அவர், ‘மின​மாட்​டா’, ‘ஜீன் டு பாரி’ போன்ற சர்​வ​தேச படங்​களில் நடித்​தார். ‘மாட்’, ‘த்ரீ டேஸ் ஆன் தி விங் ஆஃப் மேட்​னஸ்’ ஆகிய படங்​களை​யும் இயக்​கி​னார்.

தற்​போது அவர் ஹாலிவுட்​டுக்கு மீண்​டும் திரும்​பி​யுள்ளார். அவர் நடித்​துள்ள புதிய படம் ‘எபனேசர்: எ கிறிஸ்​து​மஸ் கரோல்’. சார்ல்​ஸ் டிக்​கன்​ஸின் புகழ்​பெற்ற ‘எ கிறிஸ்​து​மஸ் கரோல்’ என்ற நாவலை அடிப்​படை​யாகக் கொண்டு இப்​படம் உரு​வாகி​யுள்​ளது. வழக்​க​மான கிறிஸ்​து​மஸ் கதை​யாக இல்​லாமல், திகிலும் அமானுஷ்ய விஷ​யங்​களை​யும் இணைத்து உரு​வாக்​கி​யுள்ளனர்.

சமீபத்​தில் நடை​பெற்ற சான் டியாகோ, காமிக்​-​கான் 2026 விழா​வில், பாரமவுண்ட் பிக்​சர்​ஸ் இப்​படத்தை அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​துள்​ளது. இதில், புகழ்​பெற்ற எபெனீசர் ஸ்க்​ரூஜ் கதா​பாத்​திரத்​தில் நடிக்​கும் ஜானி டெப், அந்த வேடத்​திலேயே ரசிகர்​கள் முன் தோன்றி அச்​சரியப்​படுத்​தி​னார்​.

SCROLL FOR NEXT