இயக்​குநர் மார்க் ரைடெல்

 
ஹாலிவுட்

ஹாலிவுட் இயக்​குநர் மார்க் ரைடெல் கால​மா​னார்

நிலா

பிரபல ஹாலிவுட் இயக்​குநர் மார்க் ரைடெல் கால​மா​னார். அவருக்கு வயது 97. ஹாலிவுட்​டில் வெளி​யான, த போக்ஸ் (1967), த ரீவர்ஸ் (1969), த கவு​பாய்ஸ் (1972), சிண்ட்​ரெல்லா லிபர்ட்டி (1973), ஆன் கோல்​டன் பாண்ட் (1981), இன்​டர்​செக்​சன் (1994) உள்பட பல படங்​களை இயக்​கிய​வர் மார்க் ரைடெல். பல சின்​னத்​திரை தொடர்​களை​யும் இயக்​கி​யுள்​ளார்.

ஹாலிவுட் என்​டிங் உள்பட சில படங்​களில் நடித்​தும் இருக்​கிறார். குடும்ப உறவு​களை மைய​மாகக் கொண்ட இவருடைய ‘ஆன் கோல்​டன் பாண்ட்’ திரைப்​படம் 10 பிரிவு​களில் ஆஸ்​கர் விருதுக்குப் பரிந்​துரைக்​கப்​பட்​டது. இதில் ஹென்றி ஃபோண்​டாவுக்கு சிறந்த நடிகர், கேதரின் ஹெப்​பர்​னுக்கு சிறந்த நடிகை உள்​ளிட்ட 3 விருதுகள் கிடைத்​தன. மார்க் ரைடெலும் சிறந்த இயக்குநருக்​கான விருதுக்​குப் பரிந்​துரைக்​கப்​பட்​டார்.

அமெரிக்​கா​வின் லாஸ் ஏஞ்​சல்​ஸில் உள்ள உட்​லண்ட் ஹில்ஸ் பகுதி​யில் வசித்து வந்த மார்க் ரைடெல், வயது மூப்பு காரண​மாக வியாழக்​கிழமை கால​மா​னார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரையுல​கினர் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT