நடிகர் டொனால்ட் கிப்

 
ஹாலிவுட்

ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் கால​மா​னார்

நிலா

பிரபல ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் தனது 71-வது வயதில் கால​மா​னார்.

1988-ம் ஆண்டு வெளி​யான ‘பிளட்​ஸ்​போர்ட்’ என்ற தற்​காப்பு கலை படம் மூலம் உலகம் முழு​வதும் அறியப்​பட்​ட​வர் டொனால்ட் கிப். இதில் இவரது நகைச்​சுவை கலந்த முரட்​டுத் தனமான நடிப்பு வரவேற்​பைப் பெற்​றது. தொடர்ந்து ‘ரிவெஞ்ச் ஆஃப் தி நெர்ட்​ஸ்’, ‘மேஜிக் கிட் 2’, ‘ஹை வோல்​டேஜ்’ உள்பட பல படங்​களில் நடித்துள்ளார்.

திரைப்​படங்​கள் மட்​டுமின்றி அமெரிக்​கத் தொலைக்​காட்​சித் தொடர்​களி​லும் நடித்​துள்​ளார். ஆறடி 4 அங்​குல உயர​மும், கம்பீரமான தோற்​ற​மும் கொண்ட அவர், திரை​யில் தனது அசாத்தி​ய​மான நடிப்​பால் தனி முத்​திரை பதித்​தவர்.

அமெரிக்​கா​வின் டெக்​ஸாஸில் குடும்​பத்​தினருடன் வாழ்ந்து வந்த அவர், கடந்த சில மாதங்​களாக உடல்​நலக் குறை​வால் பாதிக்​கப்​பட்​டிருந்​தார். இந்​நிலை​யில் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். அவர் மறைவுக்கு ரசிகர்​கள், திரை​யுல​கினர் இரங்​கல் தெரிவித்துள்​ளனர்.

SCROLL FOR NEXT