நடிகை பிரி​யங்கா சோப்ரா

 
ஹாலிவுட்

‘இந்​திய ​படங்​கள் உலகளாவிய அங்கீ​காரம் பெற முடியாது என்றனர்,​ ஆனால் இன்று...’ - பிரியங்கா சோப்ரா

செய்திப்பிரிவு

ஹாலிவுட் திரைப் ​படங்​களைப் போல இந்​திய திரைப்​படங்​கள் உலகளா​விய அளவில் தாக்​கத்தை ஏற்​படுத்த முடி​யாது என்று ஒரு​காலத்​தில் தன்​னிடம் கூறப்​பட்​ட​தாகப் பிரி​யங்கா சோப்ரா தெரிவித்துள்​ளார்.

கேன்​ஸில் நடந்த கருத்​தரங்கு ஒன்​றில் பேசிய அவர் கூறும்​போது, “ஹாலிவுட் படங்​களைப் போல இந்​தி​யத் திரைப்​படங்​கள் ஒருபோதும் உலகளா​விய அங்​கீ​காரத்​தைப் பெற முடி​யாது என்று என்​னிடம் சொன்​னார்​கள். உங்​கள் மொழியை யாரும் புரிந்​து​கொள்ள மாட்​டார்​கள் என்​பதே காரண​ம் என்று சொல்​லப்​பட்​டது. ஆனால் நல்ல கதைகளுக்கு மொழி ஒரு தடையல்ல என்​பதை இன்று உலகமே நிரூபித்​துள்​ளது.

இப்​போது எந்த மொழி​யில் கதை சொல்​லப்​படு​கிறது என்​பது முக்கியமல்ல. வலு​வான யோசனை​களும் நல்ல கதைகளும்​ தான் முக்கி​யம். அதனால் ​தான் உலகம் முழு​வதும் மக்​கள் பல்​வேறு மொழிப் படங்​களை ரசிக்​கிறார்​கள்.

முன்​னாள் சோவி​யத் ஒன்றியத்​தில் 1950-களி​லிருந்தே இந்​தி​யத் திரைப்​படங்​கள் வெற்றி பெற்​றிருந்​தா​லும், வெளி​நாடு​களில் தொடர்ச்​சி​யான வெற்றி என்​பது 2000-க்​குப் பிறகே தொடங்​கியது; முதலில் வெளி நாடு​களில் வசிக்​கும் இந்​தி​யர்​கள் மூல​மாக​வும், பின்​னர் அவர்களைத் தாண்​டிப் பரவலாக​வும் இந்த வெற்றி அமைந்​தது.

‘முத்​து’, ‘தங்​கல்’, ‘ஆர்​ஆர்​ஆர்’ போன்ற திரைப்​படங்​கள் சீனா, அமெரிக்​கா, ஜப்​பான் போன்ற நாடு​களில் இந்​தி​யர் அல்லாதவர்களாலும் அதி​கள​வில் பார்க்​கப்​பட்​டன. பொழுது​போக்​குத் துறை​யில் செயல்​படும் ஒரு கலைஞ​ராக இருப்​ப​தற்கு இது அற்​புத​மான காலம். ஏனென்​றால் இங்கு ஐடி​யாக்​களே மூலதனமாகத் தி​கழ்​கின்​றன.

உங்​களிடம் நல்ல ஐடியா இருந்தால், அதைப்​ படமாக்​கி யூடியூப்​பில்​ பதிவேற்​றலாம்​; அது இப்​போது வெளி​யாகி​யுள்​ள ‘அப்​செஷன்’​ படத்​தைப்​ போலப்​ பிரபலமடைய​லாம்​ என கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT